சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு மடிக்கணினிகளை வழங்கினார். 

நிகழ்ச்சியில் பேசிய அவர், செல்போன் நல்ல நோக்கத்திற்காக கண்டுபிடிக்கப்பட்டாலும், அவற்றை பல இளைஞர்கள் தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். அதனால், மாணவர்களிடையே படிப்பில் ஆர்வம் குறைந்து வருகிறது. செல்போன்களால் தான் பல இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்கின்றனர். மாணவர்கள் மடிக்கணினியை சரியான தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அவர் ஆவேசமானார். 

அமெரிக்காவில் மோட்டோரோலா நிறுவனத்தில் 1970 களில் பணியாற்றியபோது, மார்ட்டின் கூப்பர் முதல் கையடக்க செல்லிடத் தொலைபேசியை 1973 இல் கண்டுபிடித்து 1983 ஆம் ஆண்டில் சந்தைக்கு கொண்டு வந்தார். அமைச்சர் பாஸ்கர் உதைக்க வேண்டும் எனச் சொன்னது இந்த மார்டின் கூப்பரைத் தான்.