தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீதான ஊழல் புகார்கள் குறித்து விசாரிக்க லோக் அயுக்தா அமைப்பை உடனடியாக அமைக்க வேண்டும் என பா... நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குட்கா ஊழல் விசாரணை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த, இந்த வழக்கை தமிழக அரசே தானாக முன்வந்து சி.பி..-க்கு மாற்றுவதும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவின் இயக்குனராக டி.ஜி.பி நிலையில் உள்ள அதிகாரியை அமர்த்தி அவரையே விசாரணை அதிகாரியாக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

குட்கா ஊழல் பற்றி விசாரணை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ள நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் மீதான 12 கோடி ஊழல் புகார் குறித்து அவரிடம் உயர்நீதிமன்றம் விளக்கம் கோரியிருப்பதை  ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீதான ஊழல் புகார்கள் குறித்து விசாரிக்க லோக் அயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை தான் இவை வலியுறுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தமிழகத்தில் உடனடியாக லோக் அயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று ராமதாஸ் தனது அறிக்கையில் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.