The list of assets of the chief ministers Who is the property of whom

இந்தியாவில் உள்ள மாநிலங்களின் முதல்வர்களின் சொத்துப்பட்டியலை ஜனநாயக சீர்திருத்த சங்கம் நேற்று வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 12வது இடம் கிடைத்துள்ளது. இந்த சொத்துப்பட்டியலில் முதல் ஐந்து பணக்கார முதல்வர்கள் யார் யார் என்பதை தற்போது வெளியாகியுள்ளது.

1. ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ.177 கோடி


2. அருணாச்சலப்பிரதேச முதல்வர் பீம கந்துக்கு ரூ.129.57 கோடி .

3. பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங் - ரூ.48.31 கோடி

4. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் - (ரூ.15.15 கோடி

5. மேகாலயா முதல்வர் முகுல் சங்மா (ரூ.14.50 கோடி) சொத்து மதிப்பு.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.7.80 கோடி சொத்து மதிப்புடன் 12வது இடத்தில் உள்ளார்.

மேலும் இந்தியாவில் உள்ள 31 மாநில முதல்வர்களில் 25 முதல்வர்கள் ரூ.1 கோடிக்கு மேல் அதிக சொத்து மதிப்பு பெற்றுள்ளனர். மேலும் இந்தியாவில் உள்ள முதல்வர்களில் குறைவான சொத்து மதிப்பை உடையவர்களின் பட்டியலில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் பெயர் உள்ளது.

இந்த பட்டியலில் 26 லட்சம் ரூபாய் சொத்துகளுடன் திரிபுரா முதலமைச்சர் மாணிக் சர்க்கார் கடைசி இடத்தில் உள்ளார். அதேபோல், அதிக வழக்குகளை கொண்ட முதலமைச்சர்கள் பட்டியலில் மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் முதலிடத்தில் உள்ளார்.

அவர் மீது 22க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகவும், இந்த பட்டியலில் 2வது இடத்தில் உள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மீது 11 வழக்குகள் இருப்பதாகவும், ஜனநாயக சீர்த்திருத்த சங்கம் கூறியுள்ளது.

மேலும் 5 பாஜக முதல்வர்கள், 2 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜனதா தளம் (ஒற்றுமை) ஆகிய கட்சி முதல்வர்கள் கடைசி இடங்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.