The income tax sources reported that the test was based on a list of the assets of Sasikala and his relatives.

சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் சொத்துக்கள் குறித்து ஒரு முக்கிய பிரமுகர் கொடுத்த பட்டியலின் அடிப்படையிலேயே சோதனை நடத்தப்பட்டதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அந்த பட்டியலை கொடுத்ததே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் என தகவல் வெளியாகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சசிகலா மற்றும் அவரது உறவினர் வீடுகளில் 1800 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். 

இதுபோன்ற மிகப்பெரிய அளவிலான சோதனை இதுவரையில் இந்தியாவில் எங்குமே நடக்காத சீக்ரெட் ஆபரேஷனாக அமைந்துள்ளது எனலாம். 

இந்த அதிரடி சோதனையில், ஏராளமான தங்கம் மற்றும் வைர நகைகள், கட்டுக்கட்டாக பணம், ரூ.1500 கோடிக்கும் மேல் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் ஆகியவை கிடைத்ததாக கூறப்படுகிறது. 

ஆனால் இதுவரை வருமான வரித்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக எவ்வளவு ஆவணங்கள் கிடைத்தது என வெளியிடவில்லை. 

இந்த சோதனை குறித்து முக்கிய பட்டியலை தமிழகத்தை சேர்ந்த ஒரு முக்கிய நபர் அளித்ததின் அடிப்படையிலேயே சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஆனால் அந்த முக்கிய நபர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் என்ற தகவல் வைரலாக பேசப்பட்டு வருகின்றது. 

சசிகலா குடும்த்தின் ஆதிக்கத்தை ஒடுக்குவதற்காக எடப்பாடி பழனிசாமி, கடந்த 3 மாதங்களுக்கு முன்பே இந்த பட்டியலை தயார் செய்து வருமானவரித்துறைக்கு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.