இந்து கடவுளை இழிவுபடுத்தும் வகையில் முழக்கம் எழுப்பிய செஞ்சடை பேரணியை இந்து மக்கள் கட்சி கண்டித்துள்ளதுடன், அதற்கு ஏற்பாடு செய்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
இந்து கடவுளை இழிவுபடுத்தும் வகையில் முழக்கம் எழுப்பிய செஞ்சடை பேரணியை இந்து மக்கள் கட்சி கண்டித்துள்ளதுடன், அதற்கு ஏற்பாடு செய்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. திமுக ஆட்சியில் தான் இந்து மதத்தை கொச்சைப்படுத்தும் நிலையை இந்த அரசு உருவாக்குகிறது என்றும், இந்து மக்கள் கட்சியின் ஆன்மீக அணி கண்டித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் மதுரை மாவட்ட தலைவர் குணா வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-
மதக் கலவரத்தை தூண்டவே தி.க , வி.சி.க, கம்யூனிஸ்ட் போன்ற இந்து விரோத கட்சிகள் இந்துக்களையும் இந்து தெய்வங்களையும் இழிவு படுத்தும் வகையில் செஞ்சட்டை பேரணியை நடத்தி உள்ளார்கள். இதற்கு காவல்துறை அனுமதி கொடுத்தது ஏன்??? செஞ்சட்டை பேரணியில் இந்துசமய கடவுளையும் இந்துசமய சடங்குகளையும் கொச்சை படுத்தி கோஷங்கள் எழுப்பியவர்கள் மீதும் இந்துக்களை தூண்டும் வகையில் இந்து மதத்தை இழிவு படுத்த தூண்டுதலாக இருந்த மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை நடவடிக்கை எடுக்க தவறினால் சு. வெங்கடேசன் அவர்களை வழி மறிப்போம். இந்துக்கள் சிறைபிடிப்போம்.

மதுரையில் 29-5-2022 அன்று தி.க, கம்யூனிஸ்ட் விசிக நடத்திய செஞ்சட்டை பேரணியில் கலந்து கொண்டவர்கள் பெண்களை கற்பழித்த கண்ணன் ஒரு கடவுளா என்றும் ஐயப்பனை கடவுள் என்றால் அறிவுக்கு அது பொருந்துமா என்றும் முருகனுக்கு அலகு குத்துபவர்களையும் ஆணி செருப்பில் நடந்து செல்வதையும் இழிவாக பேரணியில் கோஷம் இட்ட இந்துக்களுகு எதிரான பயங்கரவாதிகளை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும்.
இந்து மத கடவுள்களையும், இந்துமத சாஸ்திர சம்பிரதாய சடங்குகள் மற்றும் வேண்டுதல்களையும் அசிங்கப்படுத்தி கொச்சை படுத்தி, இழிவுபடுத்தி, கை தட்டி பாட்டு பாடி கோஷம் எழுப்பி பேரணி சென்றுள்ளார்கள். தற்பொழுது அந்த வீடியோ காட்சி வைரலாக பரவி வருவதை பார்த்து கடவுள் நம்பிக்கை கொண்ட இந்துக்கள் அனைவரும் கொந்தளித்துள்ளனர். இந்து கடவுளையே கொச்சனையாக வசைபாடியவனை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

அதற்கான தண்டனை முறையாக கிடைக்க வேண்டும் என்பதே இந்து மக்கள் கட்சி & இந்து மக்கள் கட்சி ஆன்மீகம் அணி மற்றும் இந்துக்களின் கோரிக்கை. இந்துக்களின் விரோதிகள் தி.க, விசிக, கம்யூனிஸ்ட் போன்ற தரம்கெட்ட வர்களின் இந்த கோஷம் இந்துக்களையும் இந்து அமைப்புகளுக்கும் மிகுந்த வேதனையையும், மன உலச்சலையும் ஏற்படுத்தி உள்ளது. திமுக ஆட்சியில் தான் இந்து மதத்தை கொச்சை படுத்தும் நிலையை இந்த அரசு உருவாக்குகிறது . இந்து சமயத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய இந்த கேவலமான செயலை இந்து மக்கள் கட்சி, இந்து மக்கள் கட்சி ஆன்மீகம் அணி மிக வன்மையாக கண்டிக்கிறது.
ஆகவே செஞ்சட்டை பேரணி என்ற பெயரில் இந்துகடவுளையும், இந்துசமய சாஸ்திர சம்பிரதாய சடங்குகளையும், வேண்டுதலையும்
கேலி செய்யும் வகையிலும் , இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையிலும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உண்டாக்கும் வகையிலும் வேண்டுமென்றே திட்டமிட்டு இந்துசமயத்தை மட்டும் குறி வைத்து இழிவுபடுத்தி இப்பேரணியில் கோசங்கள் எழுப்பிய இந்துவிரோத சக்திகள் மீதும், இப்பேரணியை தலைமை ஏற்று நடத்திய அனைத்து தரப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியல் அமைப்பு சட்டத்திற்க்கு எதிராகவும், இந்துமதத்திற்க்கு விரோதமாகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மீதும் இந்துசமய அறநிலையத்துறை சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
