Asianet News TamilAsianet News Tamil

திமுக வேட்பாளர் வெற்றி பெற்றது செல்லுமே... அதிமுக மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்...!

The High Court has ordered the DMK candidate in the Cheyyur assembly seat RTI to win.
The High Court has ordered the DMK candidate in the Cheyyur assembly seat RTI to win.
Author
First Published Nov 8, 2017, 6:59 PM IST


செய்யூர் சட்டமன்ற தொகுதி தேர்தலில் திமுக வேட்பாளர் ஆர்.டி.அரசு வெற்றி பெற்றது செல்லும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

செய்யூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இதில், அதிமுக வேட்பாளராக முனுசாமியும், திமுக வேட்பாளராக ஆர்.டி. அரசுவும் போட்டியிட்டனர். 

மேலும் இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாமக, நாம் தமிழர் கட்சி, பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டனர். 

இதில், 63 ஆயிரத்து 443 வாக்குகள் பெற்று 360 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ஆர்.டி அரசு வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் முனுசாமி 63 ஆயிரத்து 142 வாக்குகள் பெற்றிருந்தார். 

இதனால் ஆர்.டி அரசு வெற்றி பெற்றதை எதிர்த்து அதிமுக வேட்பாளராக களமிறங்கிய முனுசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம் செய்யூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் திமுக வேட்பாளர் ஆர்.டி.அரசு வெற்றி பெற்றது செல்லும் என கூறி உத்தரவிட்டது. 

மேலும் அதிமுக வேட்பாளர் முனுசாமி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

Follow Us:
Download App:
  • android
  • ios