பரம்பரை பாஜக காரர்களே அமைதியாக இருக்கும்போது நீ ஏன் கூவுற என கராத்தே தியாகராஜன் அரசியல் விமர்சகர் பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் விமர்சித்து கேள்வியெழுப்பியுள்ளார்.

பரம்பரை பாஜக காரர்களே அமைதியாக இருக்கும்போது நீ ஏன் கூவுற என கராத்தே தியாகராஜன் அரசியல் விமர்சகர் பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் விமர்சித்து கேள்வியெழுப்பியுள்ளார். " உங்களுக்குத்தான் வாரத்துக்கு ஒரு தலைவர் ஆச்சை தியாகராஜன் " என்றும் அவர் கூறியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜக- திமுக இடையேயான மோதல் பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தமிழக முதலமைச்சர், முதல் அமைச்சர்கள் வரை அனைவர் மீதும் அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் அதேநேரத்தில் அண்ணாமலை மீதும் திமுக நிர்வாகிகளும் அமைச்சர்களும் கடும் விமர்சனங்களை தொடுத்து வருகின்றன்னர்.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் தாமோ. அன்பரசன் அண்ணாமலையை மிகக்கடுமையாக ஒருமையில் தாக்கி பேசினார்.

அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாகி ரவுடிகளை கைது செய்து சிறையில் போட்டதை காட்டிலும், பாஷகவில் சேர்ந்து ரவுடிகளை கட்சியில் சேர்த்ததுதான் அவரின் சாதனை என்றார், திமுகவை கேள்வி கேட்பதற்கும் விமர்சிப்பதற்கும் அண்ணாமலையார் என்ன அருகதை இருக்கிறது, வேண்டும் என்றால் மோடியிடம் போய் நீட் தேர்வை ரத்து செய்யச் சொல் என அண்ணாமலையை டா போட்டு ஒருமையில் பேசினார். இது பாஜகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரின் இந்த பேச்சுக்கு பாஜகவினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக பாஜக செயலாளர் கராத்தே தியாகராஜன் வெளியிட்ட வீடியோவில், அமைதிப்படை படத்தில் வரும் அமாவாசை கேரக்டர் போல கன்டோன்மென்ட் சண்முகம் எம்எல்ஏ வீட்டில் வேலை செய்து அவரின் பதிவியை காலி செய்து மாவட்ட செயலாளர் ஆனவர்தான் இந்த தாமோ அன்பரசன். 

Scroll to load tweet…

மோடியையும், அண்ணாமலையும் தரக்குறைவாக பேசுகிறார், பாஜக தொண்டர்களை தரக்குறைவாக பேசுவதை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் நாங்கள் இதைவிட மோசமாக கேவலமாக பேசுவோம் என எச்சரித்திருந்தார். கராத்தே தியாகராஜன் இந்த பேச்சை பதிலுக்கு பலரும் விமர்சித்து வருகின்றனர், இந்நிலையில் கராத்தே தியாகராஜன் பதிவை டேக் செய்து, " உனக்குதான் வாரத்துக்கு ஒரு தலைவர் ஆச்சே தியாகராஜா.. ஏன் ஓவரா கூவுற கொஞ்சம் அமைதியா இரு. " பரம்பரை பிஜேபி காரங்க கூட அமைதியா இருக்கான்" என்று சவுக்கு சங்கர் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பலரும் இந்த பதிவை லைக் செய்து கமெண்ட் செய்து வருகின்றனர்.