The Government of Tamil Nadu has issued a holiday to all schools colleges and universities for Pongal festival tomorrow.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளைக்கு அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைகழகங்களுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வழக்கமாக பொங்கல் பண்டிகைன்னு சொன்னாலே பெரும்பாலும் 3 நாட்கள்தான் விடுமுறை விடுவது வழக்கம். ஆனால் இந்த தடவ ஞாயிற்று கிழமை பொங்கல் வரதனால சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என 4 நாட்கள் வருது.
இது போதாது என்று தமிழக அரசு வெள்ளிக்கிழமையையும் சேர்த்து 5 நாட்களாக விடுமுறையை அதிகரித்து உள்ளது. ஏண்டா இந்த திடீர் டிவிஸ்ட்னு யோசிச்சா பல அதிரடி தகவல்கள் எல்லாம் கசிய ஆரம்பிக்குது.
ரொம்ப யோசிக்காதீங்க... நான் என்ன புதுசா சொல்ல போறேன். எல்லாருக்கு தெரிஞ்ச விஷயம்தான். ஆனால் யோசிச்சிருப்பமான்னுதான் தெரியல.
அதாங்க.... நம்ப போக்குவரத்து ஊழியர்கள் இருக்காங்கல்ல... அவங்க ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத்தொகை என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 8 நாளா வேலை நிறுத்த போராட்டத்துல ஈடுபட்டுட்டு வராங்க.
இதுனால் தமிழகமே ஸ்தம்பித்து போய் இருக்குன்னுதான் சொல்லனும். பொங்கல் வேற நெருங்குறதால வெளியூர் மக்களெல்லாம் அவங்கவங்க ஊருக்கு போவாங்களானே சந்தேகம் எழும்ப ஆரம்பிச்சிடுச்சி.
அரசு இனி பேச்சுவார்த்தையே இல்லைன்னு சொன்னதாலே நாங்க பஸ்ஸ எடுக்கமாட்டோம்ன்னு தீர்மானமா இருக்காங்க போக்குவரத்து ஊழியர்கள்.
இந்நிலையில இத எப்படிடா சமாளிக்கிறதுன்னு யோசிச்ச தமிழக அரசு யாருக்கெல்லாம் பஸ் ஓட்ட தெரியும் வாங்க...! லைசன்ஸ காமியுங்கன்னு சொல்லிட்டு பஸ் ஓட்ட விடுறாங்க...
ஏதோ அவங்களால முடிஞ்சத அவங்க செய்றாங்கன்னு பார்த்தா... தற்காலிக ஓட்டுநர்கள் எல்லாம் மரத்துலையும் செவுத்தலையும் வீட்டு மேலையும் பஸ்ஸ விடுறாங்க...
இதனால பல விமர்சனங்கள் வெளியானுச்சு.. இதைபார்த்த தமிழக அரசு இது சரிப்பட்டு வராது பள்ளி கல்லூரிகளுக்கெல்லாம் விடுடா எக்ஸ்ட்ரா லீவுன்னு சொல்லி வெள்ளிக்கிழமையும் சேர்த்து லீவு விட்டுடாங்கன்னு ஒரு தகவல் இருக்கு.
சரி... இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்ன்னு கேட்குறீங்களா...? பள்ளி, கல்லூரி, யுனிவெர்சிட்டிக்கெல்லாம் லீவு விட்டுட்டு அங்கிருக்கும் டிரைவர்களை வைத்து பஸ்ஸை இயக்குறதுதான் எடப்பாடியோட மாஸ்டர் பிளான்னு தகவல் வெளியாகி இருக்குங்க...
இதுக்கு இடையில 2.44 சதவீதத்தை இடைக்காலமாக ஏற்க தயார் என்றும் பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்துல தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளது. இதற்கு தமிழக அரசும் ஒப்புதல் தெரிவிச்சிருக்கு.
ஒருவேளை நீதிமன்றம் சமாதானப்படுத்திடுச்சினா... போராட்டம் வாபஸ் பெற்று பேருந்த இயக்க போக்குவரத்து ஊழியர்களே வந்துடுவாங்க...
அரசு அறிவித்த லீவுனால மாணவர்களும் ஆசிரியர்களும் நல்லா என்ஜாய் பண்ணுவாங்கன்னுதான் சொல்லனும்.
இது எங்க போய் முடியும்ன்னு பொறுத்திருந்துதான் பார்க்கணும்...!
