விவசாயம் உட்பட அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது: விவசாயம் தொடர்பான சட்டங்கள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.  

விவசாயிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையேயான உரையாடலுக்கான பாதை எப்போதும் திறந்தே இருக்கிறது என பிரதமர் மோடி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் போது தெரிவித்துள்ளார். அரசும்- விவசாயிகளு ஒருமித்த கருத்தை எட்டவில்லை என்றாலும் விவசாயிகள் வைக்கும் கருத்துக்கள் குறித்து விவாதிக்க வேண்டுமென அவர் கூறியுள்ளார். 

பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. முன்னதாக பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர் கூறுகையில், விவசாயிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உரையாடலின் பாதை எப்போதும் திறந்தே இருக்கிறது. நரேந்திர தோமரின் வார்த்தைகளை மீண்டும் நான் சொல்ல விரும்புகிறேன் என அவர் கூறினார். 

பேச்சுவார்த்தையில் அரசாங்கமும் விவசாயிகளும் ஒருமித்த கருத்தை எட்ட வில்லை என்றாலும் விவசாயிகள் தெரிவிக்கும் விருப்பங்களை பற்றி நாம் விவாதிக்க வேண்டும், உடன்பாடு எட்டுவதற்கு இடைவெளி குறைவாகவே உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். கூட்டத்தின்போது பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அர்ஜுன் மேக்வால் மற்றும் வி.முரளிதரன் ஆகியோர் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வரவுசெலவுத் திட்ட அமர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. ஜனாதிபதியின் உரையை எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டது குறித்து விவாதிக்கப்பட்டது.

விவசாயம் உட்பட அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது:

விவசாயம் தொடர்பான சட்டங்கள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது. முன்னதாக பட்ஜெட் அமர்வின் முதல் நாளில் எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியின் உரையை புறக்கணித்தன, எனவே பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. கூட்டத்தில் தேசிய கட்சித்தலைவர் ஹனுமான் பெனிவால் கலந்து கொள்ளவில்லை, விவசாய சங்கங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளார். மேலும் கூட்டத்தில் எல்ஜேபி தலைவர் சிராக் பாஸ்வான் கலந்துகொள்ளவில்லை, சிராக் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவருக்கு அதிக காய்ச்சல் உள்ளதால் கொரோனா சோதனைக்காக அவர் மாதிரிகளை வழங்கியுள்ளதாகவும் அதனால் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தவிப்பதாகவும் அவரது கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்து பட்ஜெட் கூட்டத் தொடரில் விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்காக பிப்ரவரி 2,3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் மக்களவையில் 10 மணிநேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இரு அவைகளும் 5 மணிநேரம் ஷிப்ட் அடிப்படையில் அவைகள் இயங்கும் என தெரிகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் ராஜ்யசபாவும், மக்களவையும் ஒவ்வொரு ஐந்து மணி நேரம் இடைவெளியில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலையில் மாநிலங்களவையும் அதன் பிறகு மக்களவையும் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. விவசாய சங்கங்களுக்கு ஆதரவாக பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் குழப்பம் விளைவிக்க வாய்ப்பிருப்பதாக அரசு கருதுகிறது. எதிர்க்கட்சிகளின் அமளியை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. அதுமட்டுமின்றி இந்திய சீன எல்லை பிரச்சனை பொருளாதாரம் சரிவு வேலையில்லா திண்டாட்டம் நாட்டின் பாதுகாப்பு விவகாரம் குறித்து வாட்ஸ்அப் உரையாடல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.