Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் ஆட்டம் ஆரம்பம்.. மக்களே.. இந்த மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அடித்து ஊற்ற போகுதாம்.

11.01.2022: டெல்டா மாவட்டங்கள் தென் கடலோர மாவட்டங்கள் மற்றும், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

The game starts again .. people .. Rain going to beat and pour in these districts for the next 3 days.
Author
Chennai, First Published Jan 7, 2022, 2:07 PM IST

தமிழகத்தில் இன்று டெல்டா மாவட்டங்கள் மற்றும் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் முதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், கடலோர மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் மழை தொடரும் என்றும் கூறியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள விரிவான  அறிக்கை பின்வருமாறு :- 07.01.2022: டெல்டா மாவட்டங்கள் மற்றும்  காரைக்கால்,  சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம்  மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

The game starts again .. people .. Rain going to beat and pour in these districts for the next 3 days.

08.01.2022,09.01.2022: தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 10.01.2022: டெல்டா மாவட்டங்கள் தென் கடலோர மாவட்டங்கள் மற்றும், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ளது.11.01.2022: டெல்டா மாவட்டங்கள் தென் கடலோர மாவட்டங்கள் மற்றும், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

The game starts again .. people .. Rain going to beat and pour in these districts for the next 3 days.

மூடுபனி எச்சரிக்கை :07.01.2022 ,  08.01.2022: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் காலை நேரங்களில் இலேசான பனிமூட்டம் காணப்படும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30  குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):  ஏதுமில்லை இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios