* பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர தின உரையில், தமிழ் மொழியை உச்சரித்துள்ளார். ஐ.நா.சபையில் பேசும் போது, தமிழ் மொழியில் பேசியுள்ளார். ஆர் தமிழுக்கு எவ்வளவு சிறப்பு கொடுக்கிறார்! என்பதை இதன் வாயிலாக உணர முடியும். -    ஜெயக்குமார் (மீன் வளத்துறை அமைச்சர்)

* தேர்தல் நிதியாக கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தி.மு.க. இருபத்தைந்து கோடி ரூபாய் வழங்கியதாக தகவல் வருகிறது. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். - பிரேமலதா (தே.மு.தி.க. பொருளாளர்)

* ஸ்டாலினை பற்றிப் பேசுவதற்கு எந்த தகுதியும் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை! என்பதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியே நீங்கள்  நினைவில் கொள்ள வேண்டும். அது உங்களுக்கும் நல்லது, உங்கள் எதிர்காலத்துக்கும் நல்லது.-டி.ஆர்.பாலு (தி.மு.க. எம்.பி.)

* சென்னை ஐ.ஐ.டி.யில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, தமிழ் மொழியின் பெருமை பற்றிப் பேசியதை வரவேற்கிறோம். அதே வேளையில் ‘தமிழகத்தில் ஹிந்தி திணிப்பு என்பதே இல்லை! ஹிந்தியை திணிக்க மாட்டோம்!’ என உறுதியளிக்க வேண்டும். அதுதான் சிறப்பாக இருக்கும். 
- டி.கே.எஸ். இளங்கோவன் (தி.மு.க. செய்தித் தொடர்பாளர்)

* அரசியல் தலைவர்களின் கலவையாக இருக்க விரும்புகிறேன். துணிச்சலில் ஜெ., போலவும், தமிழ் உணர்வில் கருணாநிதி போலவும், சமுதாய அக்கறையில் ராமதாஸ் போலவும், எளிமையில் விஜயகாந்த் போலவும், பேச்சாற்றலில் வைகோ போலவும் இருக்க விரும்புகிறேன். -தமிழிசை (தெலுங்கானா கவர்னர்)

* டி.என்.பி.எஸ்.சி. பற்றியெல்லாம் கருத்து கூற முடியாது. ஏனென்றால் அது தன்னாட்சி பெற்ற அமைப்பு. அதன் நிர்வாகத்தில் அரசு தலையிட்டால் ‘டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் அரசு தலையிடுகிறது’ என சொல்லிவிடுவார்கள். கொடுக்கப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டே டி.என்.பி.எஸ்.சி. செயல்படுகிறது. - எடப்பாடி பழனிசாமி (தமிழக முதல்வர்)

* குடிமராமத்து பணிகளை நேர்மையுடன் செய்து வந்த பொதுப்பணித்துறை கூடுதல் சிறப்பு செயலர் பாலாஜி, திடீரென மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுவிட்டார். நேர்மையாக பணியாற்றும் அதிகாரிகளுக்கு உரிய பணி பாதுகாப்பு தமிழகத்தில் வழங்கப்பட வேண்டும். 
- பி.ஆர். பாண்டியன் (தமிழக, காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர்)

* கால நிலை மாற்றத்தால் கடலோர நகரங்கள் அடுத்த 40 ஆண்டுகளில் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும். குறிப்பாக சென்னை, கொச்சி போன்ற நகரங்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும், புதிய நோய்கள் வரும். பொருளாதார வீழ்ச்சி ஏற்படும், மனிதர்கள் அழிவும் நேரும். - அன்புமணி ராமதாஸ் (ராஜ்யசபா எம்.பி.)

* பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பானது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.பிரதமர் மோடி தன் சொந்த விளம்பரத்திலேயே கவனமாக இருந்தார். அமெரிக்காவுடனான பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடியின் சந்திப்பில் எந்த வித முன்னேற்றமுமில்லை. 
- ஆனந்த் சர்மா (காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்)

* நான் எல்லோரிடமும் கனிவாக பேசுவேன். ஆனால் பொன்முடியின் தொனி வேறு மாதிரி இருக்கும். அப்படிப் பேசினால்தான் நிர்வாகிகள் வேலை செய்வார்கள். அந்த தொனியில் பொன்முடி பேசுவதால் சிலர் அதை அடாவடி என சொல்லியிருப்பார்கள். -மஸ்தான் (தி.மு.க. எம்.எல்.ஏ.)