நாட்டிலேயே முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையை அதாவது தானியங்கி மெட்ரோ ரயிலை பிரதமர் மோடி துவங்கி வைத்துள்ளார். ஒரே ஓடுபாதையில் ரயில்கள் வரும்பட்சத்தில் தானாகவே ரயில்கள் நிறுகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நாட்டிலேயே தானியங்கி மெட்ரோ ரயில் சேவை  தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று பிரதமர் மோடி ரயில் சேவையை தொடங்கி வைத்துள்ளார். இந்த வசதி ஜனக்புரி மேற்கு முதல் தாவரவியல் பூங்கா வரை சுமார் 37 கிலோமீட்டர் நீளத்திற்கு இந்த ரயில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மெட்ரோ ரயிலில் புதிய அனுபவத்தை மக்கள் பெறுவர் என கூறப்பட்டுள்ளது. இது மிகவும் பாதுகாப்பான சேவையாக அமையும் என்றும் ஒரே பாதையில் இரண்டு ரயில்கள் வரும் பட்சத்தில் ரயில்கள் தானாகவே நிற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியின்போது பேசிய மோடி கூறியதாவது: 

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மெஜந்தா கோட்டையை திறக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அந்த வரிசையில் முதல் தானியங்கி மெட்ரோவை திறக்கும் பாக்கியம் இன்று மீண்டும் கிடைத்துள்ளது. நாடு எவ்வளவு வேகமாக முன்னேறியுள்ளது என்பதை இது காட்டுகிறது. 2025 குள் 25க்கும் மேற்பட்ட நகரங்களில் மெட்ரோவை திறக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. டெல்லியின் முதல் மெட்ரோ அடல் பிகாரி வாஜ்பாயின் முயற்சியால் உருவாக்கப்பட்டது, இப்போது ஒவ்வொரு நாளும் 2.5 மில்லியன் மக்கள் மெட்ரோரயில் மூலம் பயணம்  செய்கின்றனர். 

நடுத்தர மக்களின் கனவுகள் இதன்மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளன. இன்று மெட்ரோ வசதி மட்டுமல்ல மாசுபாட்டையும் குறைப்பதற்கான ஒரு வழியாகவும் இது உள்ளது இதன் காரணமாக சாலைகளில் வாகன நெரிஞல் குறைக்கப்பட்டுள்ளது. ஆளில்லா மெட்ரோவை திறக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது, இந்த வசதி கொண்ட உலக நாடுகளின் பட்டியலில் தற்போது இந்தியாவும் சேர்ந்துள்ளது. உலகெங்கிலும் 46 நகரங்களில்தான் இந்த சுரங்கப்பாதை ரயில்கள் இயங்கி வருகின்றன. உலகின் முதல் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை 1981ஆம் ஆண்டில் ஜப்பானில் கோஸ்ட் நகரில் தொடங்கப்பட்டது.  இவ்வாறு அவர் கூறினார்.