அண்ணன் டிடிவி தினகரன் கொடுத்த தேர்தல் அறிக்கையை மக்களிடம் முழுவதுமாக கொண்டு சேர்த்துள்ளோம். மற்ற கட்சியை போல  வாஷிங்மெஷின் தருகிறோம் என பொய்யான அறிக்கையை நாங்கள் வெளியிடவில்லை. 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கூட்டணி கட்சியான எஸ்டிபிஐ கட்சியை சார்ந்த முகம்மது தமீம் அன்சாரி ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், டிடிவி தினகரன் அவர்களின் கூட்டணி கட்சியில் நாங்கள் ஒன்றாக இணைந்து இந்த தொகுதியில் போட்டியிடுகிறோம். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நிச்சயம் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வாக்காளர்கள் எங்களை நூறு சதவீதம் வாக்குகளை கொடுத்து ஜெயிக்க வைப்பார்கள். அதேபோன்று சட்டமன்ற தேர்தலுக்கான நாட்கள் குறைவாக இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை, ஏனென்றால் நாங்கள் தேர்தலுக்காக வாக்குகளை கேட்டு செல்லவில்லை ஒவ்வொரு தொகுதியிலும் எங்கள் கட்சியை சார்ந்தோர் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து நிவர்த்தி செய்து தான் வருகிறார்கள். 

அண்ணன் டிடிவி தினகரன் கொடுத்த தேர்தல் அறிக்கையை மக்களிடம் முழுவதுமாக கொண்டு சேர்த்துள்ளோம். மற்ற கட்சியை போல வாஷிங்மெஷின் தருகிறோம் என பொய்யான அறிக்கையை நாங்கள் வெளியிடவில்லை. எங்களுடைய தேர்தல் அறிக்கை நிச்சயம் பொதுமக்களுக்கு பிடித்துள்ளது. ஆகவே எங்களுக்குதான் வாக்களித்து 100 சதம் வெற்றியை பெற்றுத் தருவார்கள்.