Asianet News TamilAsianet News Tamil

"நோ மேயர்.. துணை மேயர் ஓகே.." கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த 'திமுக..' கவலையில் கூட்டணிக்கட்சிகள் !!

திமுக அதன் கூட்டணி கட்சிகளுக்கு மேயர் சீட்களை கொடுக்க முடியாது என்று கையை விரித்துள்ளதால், அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக ஆகிய கட்சிகளுக்கு  கவலை கொடுத்து இருக்கிறது. 

The DMK has raised concerns that its allies the Congress and vck will not be able to give mayoral seats to its alliance
Author
Tamilnadu, First Published Mar 2, 2022, 12:06 PM IST

சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஓசூர், கரூர், கும்பகோணம், கடலூர், சிவகாசி, திண்டுக்கல், வேலூர், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோயில் என 21 மாநகராட்சிகளில் மேயராக வரப் போகிறவர்களில் சிலர் புதியவர்களாகவும் அதே நேரம் நிர்வாகத்தில் திறன் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என திமுக தலைமை நினைப்பதாக அக்கட்சியினர் பேசி வருகின்றனர்.

மேயர்,  துணை மேயர் என்று ஒன்பது மேயர் பதவிகள் தங்கள் கட்சியினருக்கு வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.   திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியினரும் தங்களுக்கு ஆவடி, தாம்பரம், திருச்சி, கோவை , கன்னியாகுமரி, சிவகாரி மாநகராட்சிகளில் மேயர்,  துணை மேயர் பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.  

The DMK has raised concerns that its allies the Congress and vck will not be able to give mayoral seats to its alliance

திமுக கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சியினரும் தங்கள் தரப்பில் வேண்டுகோள் வைத்துள்ளனர்.   ஆனால் 21 மேயர் பதவிகளும் திமுகவுக்கு தான் கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்க வாய்ப்பு இல்லை என்று கூட்டணிக் கட்சியினரின் எதிர்பார்ப்புக்கு கையை விரித்திருக்கிறது திமுக மேலிடக் குழு.

வருகின்ற 4ஆம் தேதி அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவர் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்று அன்றைய தினமே பதவியேற்பு நடைபெற உள்ள சூழ்நிலையில், நேரடியாக இன்றைய தினம் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. மொத்தம் உள்ள  21 மாநகராட்சிகளுக்கு 21 மேயர் மற்றும் துணை மேயர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 

The DMK has raised concerns that its allies the Congress and vck will not be able to give mayoral seats to its alliance

138  நகராட்சி களுக்கான நகர்மன்றத் தலைவர் மற்றும் துணைத்தலைவர்கள் தேர்தெடுகிக்க பட உள்ளனர். 489 பேரூராட்சி களுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர்களின் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி ஆனது 21 மாநகராட்சியையும் கைப்பற்றியது, மொத்தமுள்ள 138 நகராட்சிகளில் 132 நகராட்சிகளை கைப்பற்றியது. 489 பேரூராட்சிகளில் 435 பேரூராட்சியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. 

சென்னை மேயர் மற்றும் 8 துணை மேயர் பதவி உள்பட 9 மேயர் மற்றும் துணை மேயர் பதவிகள் தங்கள் கட்சியினருக்கு வழங்க வேண்டும் என்று திருமாவளவன் முதல்வர் ஸ்டாலினிடம் நேரிடையாகவே கோரிக்கை வைத்திருக்கிறார்.   காங்கிரஸ் கட்சியினரும் திருச்சி, கன்னியாகுமரி, சிவகாசி, ஆவடி, தாம்பரம், கோவை ஆகிய மாநகராட்சிகளில் துணை மேயர் பதவி வேண்டுமென்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் பதவிகள் வேண்டுமென்றும் கோரிக்கை விடப்பட்டிருக்கிறது. 

The DMK has raised concerns that its allies the Congress and vck will not be able to give mayoral seats to its alliance

இதேபோல் திமுக கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சியினரும் தங்கள் தரப்பில் வேண்டுகோள் வைத்துள்ளனர். இதனால் இதற்கென்றே கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர்கள் நேரு,  வேலு மற்றும் திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் எம்பியுமான ஆ. ராசா உள்ளிட்டோர் அடங்கிய மேலிடக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மேலிட குழுவினர் கூட்டணிக் கட்சியினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். அப்போது 21 மேயர் பதவிகளும் திமுகவுக்குத்தான்.   

மேயர் பதவிகளை கூட்டணி கட்சிக்கு கொடுக்க வாய்ப்பே இல்லை என்று கையை விரித்துள்ளனர். இதையடுத்து திருமாவளவன் அறிவாலயத்திற்கே நேரில் சென்று திமுகவில் மேலிட குழுவினரை சந்தித்து தங்கள் கட்சியினருக்கு மேயர் பதவி தருமாறு வலியுறுத்தி இருக்கிறார்.  ஆனால் மேயர் சீட்கள் நிச்சயமாக கிடைக்காது, துணை மேயர் பதவிகள் கிடைக்கும் பார்க்கலாம் என்று சொல்லியிருப்பதாக கூறியிருக்கிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios