கமலின் அறிக்கை எதிரொலி: இணையதளத்தில் அமைச்சர்களின் இ-மெயில், தொலைபேசி எண் மாயம்

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளதாக கூறியதை அடுத்து, அவருக்கு எதிராக தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் எதிர்ப்பாக கருத்து தெரிவித்து வருகின்றனர். 

ஊழல் புகார் கொடுக்கும்படி நடிகர் கமல்ஹாசன் அண்மையில் அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார். அதில், ஊழல் புகார் குறித்து இணையதளத்தில் பதிவு செய்யும்படி கூறியிருந்தார்.

ஊழல் புகார் கொடுக்கும்படி நடிகர் கமல் ஹாசன் அறிக்கை வெளியிட்ட நிலையில், தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அமைச்சர்களின் இ-மெயில் முகவரி, தொலைபேசி எண் போன்ற விவரங்கள் திடீரென நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில், அமைச்சர்களின் இ-மெயில் முகவரி தொடர்பான இணையதளம் சென்று பார்த்தவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இந்த இணையதளத்தை என்.ஐ.சி. பராமரித்து வருகிறது. இது குறித்து அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறும்போது, விவரங்களை அமைச்சர்கள் கொடுத்தால் மட்டுமே பதிவேற்றம் செய்ய முடியும். அது கிடைக்கப்பெறவில்லை என்பதால் அவை வெற்றிடமாக உள்ளது என்றார்.

இது தொடர்பாக பொதுமக்களில் சிலர், நேற்று முன்தினம் வரை பெரும்பாலான அமைச்சர்களின் இ-மெயில் முகவரி, தொலைபேசி எண்கள் உள்ளட்ட விவரங்கள், இணையதளத்தில் இடம் பெற்றிருந்தன. கமலின் அறிவிப்புக்குப் பிறகு, இந்த விவரங்கள்
மாயமாகிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.