Asianet News TamilAsianet News Tamil

மாட்டுக்கறியால் தான் முன்னாள் முதல்வர் இறந்தாராம்... ஆளும் கட்சியை ஆட்டிப்படைத்து அலறவிடும் வேட்பாளர்..!

பசுக்களை மதிக்காமல் கோவாவில் மாட்டிறைச்சிக்கு அனுமதி அளித்ததால்தான் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மரணம் அடைந்தார் என்று பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா தாக்குர் தெரிவித்துள்ளார்.

The death of the former chief minister is Beef
Author
India, First Published Apr 29, 2019, 4:04 PM IST

பசுக்களை மதிக்காமல் கோவாவில் மாட்டிறைச்சிக்கு அனுமதி அளித்ததால்தான் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மரணம் அடைந்தார் என்று பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா தாக்குர் தெரிவித்துள்ளார்.The death of the former chief minister is Beef

இந்த மலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பவர்களில் ஒருவர் சாத்வி பிரக்யா தாக்குர். பெயிலில் வெளியே வந்த இவர் தற்போது பாஜக சார்பாக மத்திய பிரதேச மாநிலம் போபாலில் போட்டியிடுகிறார். தொடர்ந்து சர்ச்சையாக நிறைய பேசி வருகிறார். இந்த நிலையில் போபாலில் பிரச்சாரத்தின் போது பேசிய சாத்வி, ’’மாட்டிறைச்சி உண்பது மிக மிக தவறானது. அது இந்து மதத்திற்கு எதிரானது. மாட்டிறைச்சி உண்பவர்கள் இந்துக்கள் கிடையாது. அவர்கள் எல்லோரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.The death of the former chief minister is Beef

பாஜக ஆட்சிக்கு வந்தால் நாடு முழுக்க மாட்டிறைச்சி தடை செய்யப்படும். கோவாவில் மாட்டிறைச்சி தடை செய்யப்படும். வடகிழக்கு மாநிலங்களில் மாட்டிறைச்சி தடை செய்யப்படும். தென்னிந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் மாட்டிறைச்சி உடனே தடை செய்யப்படும். கோவாவில் பாஜக ஆட்சியில் மாட்டிறைச்சி விற்பனை செய்யப்பட்டதை ஏற்க முடியாது. மாட்டிறைச்சி விற்பனை ஆனதால்தான் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மரணம் அடைந்தார். அவர் பசுவை மதிக்கவில்லை. அதனால் தண்டனை பெற்றார்.The death of the former chief minister is Beef

ஆனால், நான் பசுவை மதித்தேன். நான் கோமியம் குடித்தேன். அதனால் எனக்கு நன்மைகள் ஏற்பட்டது. அதனால்தான் என்னுடைய மார்பக புற்றுநோய் குணம் ஆனது. நான் தினமும் கோமியம் குடித்தேன் என்று சாத்வி குறிப்பிட்டுள்ளார். ஆனால் இவருக்கு மார்பக புற்றுநோயே ஏற்படவில்லை என்று மருத்துவர்கள் சில நாட்களுக்கு முன் நிரூபித்திருந்தனர். மறைந்த மனோகர் பாரிக்கர் பாஜகவை சேர்ந்தவர். அவரது மறைவை இப்படி கீழ்த்தரமாக விமர்சிப்பதை மத்தியில் ஆளும் கட்சியான பாஜகவே விரும்பவில்லை என்கிறார்கள்.  

Follow Us:
Download App:
  • android
  • ios