மனோன்மணியின் மகன் டெபிட் கார்டை உபயோகித்து ஆன்லைனில் கேம் விளையாடி வந்திருக்கிறார். அவர் உபயோகித்த கார்டிலிருந்து 1.50 லட்சம் ரூபாய் திடீரென மாயமாகியுள்ளது.  

T.Balamurukan
கொரோனா ஊரடங்கால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் மக்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்கிறார்கள்.ஒவ்வொரு நாளும் மக்கள் பொழுதை கழிப்பதற்காக டிவி,செல்போன்,வீடியோகேம், ஆன்லைன் கேம் என அவரவர் தகுதிக்கு ஏற்ப விளையாடி வருகிறார்கள்.
ஆன்லைன் கேம் விளையாட்டில், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவின் மகள் மனோன்மணி, இவர் சென்னை குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். தனது டெபிட் கார்டிலிருந்து 1.50 லட்சம் ரூபாய் மாயமாகியுள்ளதாகவும், அதனை திரும்பப் பெற்றுத் தர வேண்டுமெனவும் அந்த புகாரில் கூறியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred



 இதற்கிடையில், மனோன்மணியின் மகன் டெபிட் கார்டை உபயோகித்து ஆன்லைனில் கேம் விளையாடி வந்திருக்கிறார். அவர் உபயோகித்த கார்டிலிருந்து 1.50 லட்சம் ரூபாய் திடீரென மாயமாகியுள்ளது.