Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவையே ஆடிப்போக வைக்கும் ஆடம்பரக்காரர்... அட... இப்படியொரு பெருமையா..?

மகாராஷ்டிர மாநிலத்தில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க முக கவசத்தை அணிந்து கொண்டு ஒரு நபர் வீதி உலா வருவது திகைப்பை ஏற்படுத்தி உள்ளது. 

The Corona is going to rock the damn  Mask
Author
Mumbai, First Published Jul 4, 2020, 6:22 PM IST

மகாராஷ்டிர மாநிலத்தில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க முக கவசத்தை அணிந்து கொண்டு ஒரு நபர் வீதி உலா வருவது திகைப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நல்லதோ, கெட்டதோ அதை வைத்து விளம்பரம் தேடுவது சிலருக்கு வாடிக்கையாகி விட்டது. அப்படியொரு மனிதர்தான் கோரோனாவை வைத்து ஆடம்பர விளம்பரம் தேடி வருகிறார். உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிதல் உள்ளிட்ட ஊரடங்கு விதிகளை பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டு வருகிறது. The Corona is going to rock the damn  Mask

மகாராஷ்ட்ரா மாநிலம், புனே நகரில் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் வசித்து வருபவர் சங்கர் குராடே.  இவர் தங்க முக கவசம் ஒன்றை அணிந்துள்ளார்.  இதன் மதிப்பு ரூ.2.89 லட்சம்.  தங்க நகை ப்ரியரான அவர் நடமாடும் நகைக்கடையாக வலம் வருபவர். தங்க பிரேஸ்லெட்டுகள் மற்றும் பெரிய தங்க சங்கிலிகளையும் அணிந்துள்ளார்.  முக கவசம் அணிவது கட்டாயம் என அரசு அறிவித்துள்ள நிலையில், அதனையும் தங்கத்திலேயே செய்து அணிந்துள்ளார்.

 The Corona is going to rock the damn  Mask

இதுபற்றி அவர், ’’கோல்ஹாபூரில் ஒருவர் வெள்ளி முக கவசம் அணிந்திருந்த வீடியோ ஒன்றை சமூக ஊடகத்தில் கவனித்தேன்.  நாம் ஏன் தங்க முக கவசம் அணியக்கூடாது எனத் தோன்றியது. உடனே தங்க நகை செய்பவரிடம் சென்று கூறினேன். ஒரு வாரத்தில் ஐந்தரை பவன் எடை கொண்ட இந்த முக கவசத்தை உருவாக்கிக் கொடுத்தார். சுவாசிப்பதற்கு எந்த சங்கடமும் இல்லை. இந்த தங்க முக கவசம் அணிவதனால் எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு வருமா? அல்லது வராதா? என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் அரசின் அனைத்து விதிகளையும் பின்பற்றினால், கொரோனா வைரஸ் பரவலை தடுத்து விடலாம்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios