திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்கள் ஒத்துக்கப்பட்டுள்ள நிலையில் அவை எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முடிவு செய்யப்படவுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் அண்ணா அறிவாலையம் வரவுள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் தங்களுக்கான இடங்களை இன்று இறுதி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட இழுபறிக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. திமுக காங்கிரஸ் இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டதை அடுத்து திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளும்  கூட்டணியை உறுதிசெய்தன.  ஒரு வழியாக தொகுதி எண்ணிக்கையை இறுதி செய்த காங்கிரஸ், தற்போது விரும்பும் தொகுதிகளை பெறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. காங்கிரஸ் கேட்கும் தொகுதியில் ஏற்கனவே  வென்ற 8 தொகுதியில் 7 தொகுதிகளை அளிக்க திமுக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. 

காங்கிரஸ் கேட்கும்  முதுகுளத்தூரில் திமுக சார்பில் ராஜகண்ணப்பன் போட்டியிட உள்ளதால் அதற்கு வாய்ப்பில்லை என மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதேபோல் தென்காசி தொகுதி திமுக மாவட்ட பொறுப்பாளர் சிவா பத்மநாதனுக்கு ஒதுக்க இருப்பதால் அந்த தொகுதியை காங்கிரஸ் பெறுவதில் இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் போட்டியிட திமுக ஒதுக்கிய இடங்கள் குறித்து சில தொகுதிகளில் விவரங்கள் வெளியாகியுள்ளது. இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும் கூட பெரும்பாலும் இதை ஒத்து இருக்கும் என கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட உள்ள இடங்கள் :  1.வேளச்சேரி  2.மதுரவாயல் 3.பொன்னேரி 4.ஸ்ரீவைகுண்டம்  5.ஆலங்குளம் 6.சிவகாசி 7.பட்டுக்கோட்டை  8. குளச்சல் 9. விருதாச்சலம்  10. ஊத்தங்கரை 11. சோளிங்கர் 12. உதகமண்டலம்  13. விளவங்கோடு  14. கிள்ளியூர்  15. முதுகுளத்தூர்  16. மதுரை வடக்கு 17. காரைக்குடி 18. வேதாரண்யம் 19. நாங்குநேரி 20. அறந்தாங்கி  21. ஓமலூர் 22. திருவாடனை  23. பாபநாசம் 24. கிருஷ்ணராயபுரம் (தனி) 25. கோவை தெற்கு  உள்ளிட்ட இடங்கள் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.