Asianet News TamilAsianet News Tamil

ஜெயலலிதா ஆவியுடன் யார் பேசினார்கள் என்பதில்தான் போட்டி.. அதிமுகவை வெளுத்து வாங்கிய கி.வீரமணி..!

மாநிலங்களவையில் போதிய பலம்  இல்லையென்றாலும் அதிமுக -வின் உதவியோடு அரசியலமைப்பு சட்டத்தை திருத்தியது பாஜக ஒன்றிய அரசு

The competition is on who spoke with Jayalalithaa's spirit .. K. Veeramani who bleached the AIADMK ..!
Author
tamil nadu, First Published Oct 22, 2021, 5:18 PM IST

அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லாத பொருளாதார அடிப்படையில் உயர்சாதியினருக்கு ஒதுக்கீடு அளிப்பது எப்படி? என்று கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். The competition is on who spoke with Jayalalithaa's spirit .. K. Veeramani who bleached the AIADMK ..!

EWS -பிரிவினருக்கான 10% இடஒதுக்கீடு; மாநிலங்களவையில் போதிய பலம்  இல்லையென்றாலும் அதிமுக -வின் உதவியோடு அரசியலமைப்பு சட்டத்தை திருத்தியது பாஜக ஒன்றிய அரசு வழக்கறிஞரை நோக்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்ட கேள்விகள் ஏற்கனவே நாம் எழுப்பியவை என்று அவர் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக இனிவரும் காலங்களில் மக்களின் ஒத்துழைப்புடன் மிகப்பெரிய மக்கள் திரள் போராட்டங்கள் நடத்தப்படும்.

மருத்துவக் கல்விக்கு மட்டும் அல்லாமல் வரக்கூடிய காலங்களில் பட்ட படிப்பு அனைத்திற்கும் நுழைவு தேர்வு வருவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பொதுமக்களின் ஒத்துழைப்புடன் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.The competition is on who spoke with Jayalalithaa's spirit .. K. Veeramani who bleached the AIADMK ..!

தமிழகத்தில் அதிமுகவில் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய பிரச்சனையை பார்ப்பதற்கே அவர்களுக்கு நேரமில்லை. கட்சியில் யார் பெரியவர்கள் என்பதில் போட்டி போடுகிறார்கள். யார் யாரால் வந்தார்கள், யார் ஜெயலலிதாவின் ஆவியுடன் பேசினார்கள் என்பதில்தான் போட்டி இருக்கிறதே தவிர ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படவில்லை. இனிமேலாவது எதிர்க்கட்சியாக செயல்படுவார்கள் என எண்ணுகிறேன்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios