Asianet News TamilAsianet News Tamil

முதல்வருக்கு கிறிஸ்தவ மத புத்தகம் வழங்கிய கலெக்டர்.. அர்த்த முள்ள இந்து மதம் புத்தகம் கொடுத்து அலறவிட்ட பாஜக.

தமிழக முதல்வருக்கு கிறிஸ்தவ மத புத்தகம் வழங்கிய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு பாஜகவினர் அர்த்தமுள்ள இந்துமதம் என்ற புத்தகத்தை வழங்கிய பதிலடி கொடுத்துள்ளனர்

The collector who gave a Christian religious book to the Chief Minister .. The BJP who gave a meaningful Hindu religious book.
Author
Chennai, First Published Jun 14, 2022, 1:32 PM IST

தமிழக முதல்வருக்கு கிறிஸ்தவ மத புத்தகம் வழங்கிய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு பாஜகவினர் அர்த்தமுள்ள இந்துமதம் என்ற புத்தகத்தை வழங்கிய பதிலடி கொடுத்துள்ளனர். குறித்த தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜக திமுக இடையே கருத்து மோதல் பன்மடங்கு அதிகரித்துள்ளது. அரசு கொண்டு வரும் ஒவ்வொரு திட்டங்களையும் பாஜக வினர் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதிமுக எதிர்க்கட்சி என்றாலும் மக்கள் மத்தியில் பாஜகதான் எதிர்க்கட்சி என்ற பிம்பத்தை உருவாக்கும் முயற்சியில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில்  திமுக அரசு இந்துக்களுக்கு எதிராக அரசு என்ற பிம்பத்தையும் பாஜகவினர் கட்டமைத்து வருகின்றனர். இது ஒருபுறம் உள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் முடிவடைந்த திட்டங்களை தொடங்கி வைப்பதற்கும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கும் கடந்த 8ஆம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் புதுக்கோட்டை மாவட்டம் சென்றிருந்தார்.

The collector who gave a Christian religious book to the Chief Minister .. The BJP who gave a meaningful Hindu religious book.

அப்போது தமிழக முதலமைச்சரை வரவேற்ற மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறியப்படாத கிறிஸ்தவம் என்ற கிறிஸ்தவ மதம் சார்ந்த நூலினை வழங்கினார். இந்நிலையில் அத்தகவலை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். இது பாஜகவினர் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியது. மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவின் இந்த செயலை  பாஜகவினர் விமர்சித்து வந்தனர். இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் முரளி மற்றும் விஜயகுமார் தலைமையில் பாஜகவினர் ஒன்றுகூடி கண்ணதாசன் அவர்கள் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் என்ற புத்தகத்தை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவின் அலுவலத்திற்கு சென்று அவரை நேரில் சந்தித்து வழங்கினர். அதற்கான புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios