Asianet News TamilAsianet News Tamil

திராவிட கட்சிகள் தமிழகத்தை சீரழித்துவிட்டதாக கருங்காலிகள் கூறுகின்றனர்.. பாஜக மறைமுகமாக விமர்சித்த முனுசாமி.!

திராவிட இயக்கங்கள்தான் தேசிய கட்சிகளை தமிழகத்திற்குள் நுழையவிடவில்லை என்று அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி  ஆவேசமாக தெரிவித்துள்ளார். 

The blacks claim that the Dravidian parties have ruined Tamil Nadu...kp munusamy
Author
Chennai, First Published Dec 27, 2020, 1:13 PM IST

திராவிட இயக்கங்கள்தான் தேசிய கட்சிகளை தமிழகத்திற்குள் நுழையவிடவில்லை என்று அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி  ஆவேசமாக தெரிவித்துள்ளார். 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்  அதிமுகவின் தேர்தல் பிரச்சார தொடக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி;- அதிமுக தலைமையிலான கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான், தமிழகத்தை வழிநடத்திய ஆளுமைகள் இல்லாத முதல் தேர்தல் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்தது. 

The blacks claim that the Dravidian parties have ruined Tamil Nadu...kp munusamy

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கலைஞர் இல்லாததால் சிலர் இடையில் வந்து இதைப் பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கின்றனர். கடந்த 50 ஆண்டுகளாக திராவிட இயக்கங்கள்தான் தேசிய கட்சிகளை தமிழகத்திற்குள் நுழையவிடவில்லை. ஆனால் இப்போது சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கருங்காலி கூட்டத்தினர் தமிழகத்திற்குள் நுழைய பார்ப்பதாக சீறினார். 

மேலும், தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை; எந்த கட்சிக் கூட்டணிக்கு வந்தாலும் அதிமுக தலைமையில்தான் கூட்டணி. திராவிட இயக்கத்துக்கு சொந்தக்காரர் கலைஞர் அல்ல. அதிமுகவில் அரசியல் வாரிசு இல்லை என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios