தலைமை செயலாளரை சந்திக்க செல்வதாகவும், அரசியல் கட்சிகள் ஓட்டுக்கான விலையை உயர்த்தி உள்ளனர் என்றும், முதலீட்டை செய்பவர்கள் போட்ட முதலீட்டை தான் எடுக்க முயற்சி செய்வார்கள் கடமையை செய்ய மாட்டார்கள் என கூறினார்.

சாதி மத அரசியல் மட்டுமே பா.ஜ.கவிற்கு தெரியும், அந்த களத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி இல்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் 5ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கட்சி கொடியை ஏற்றி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாம் வணிகமோ வாணிபமோ செய்ய வரவில்லை என்றும், தமிழகத்தை சீரமைக்க வந்துள்ளதாகவும், செயல்படாமல் இல்லா அரசை சீரமைப்பதே நமது கடமை என கூறிய அவர், நேற்று அதை செய்துள்ளதாகவும்,கைது செய்யப்படுவார்கள் எனவும் எதிர்பார்தேன் என்றும் கூறினார்.

அதன் தொடர்ச்சியாக, தலைமை செயலாளரை சந்திக்க செல்ல உள்ளதாக குறிப்பிட்ட அவர், முடிந்தால் கைது செய்யட்டும் என்றும், ம.நீ.மத்தின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம், ஆனால் பளு அதிகம் எனவும்,இது நேர்மை வீடு தூது என்றும் குறிப்பிட்டார். எம்மை பிடித்தவர்கள் எதிர்கட்சியிலும் இருக்கிறார்கள் என கூறிய அவர், ஓட்டிற்கு லஞ்சம் அதிகரித்துள்ளதாகவும்,இனி வியாபாரம் கட்டுப்படி ஆகாது என்றும், நேர்மையாளர்கள் ம.நீ ம கட்சிக்கு வாருங்கள் எனவும் அழைப்பு விடுத்தார்.வியாபாரம் தான் முக்கியம் மக்கள் முக்கியம் அல்ல என்று நினைப்பவர்கள் வர வேண்டாம் என்றும், இப்போது தான் சிலரை அனுப்பி வைத்துள்ளதாகவும்,ம.நீ.ம ஒரு குடும்பம், வளர வளரவே மரியாதை என்றும் தெரிவித்தார் 

நேர்மையாளர்களின் சந்தை கோட்டையில் நடக்க வேண்டும் என சுட்டிகாட்டிய அவர், குத்தகைக்கு விட்ட சொத்தை திரும்ப தாருங்கள் என்றும், இது 5வது பிறந்தநாள் 500 ஆக்க வேண்டியது தொண்டர்களின் கைகளில் தான் உள்ளதாகவும், ம.நீ மத்தின் ஆயுளை மீட்டுங்கள், நானும் வாழ்வேன், எஞ்சிய நாட்களை பயனுள்ளதாக மாற்றுவோம் எனவும், பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாட்டை விரைவாக தொடங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நாளை வாக்கு எண்ணிக்கைக்கு செல்லும் பொழுது அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொண்ட சான்றிதழை எடுத்துச் செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர்,சிறுசிறு காரணங்களை சொல்லி வெளியேற்ற முயற்சி செய்வார்கள் என்றும், முதலில் தபால் வாக்குகளை எண்ண வேண்டும், இதுவே தான் கற்ற பாடம் எனவும், வாக்குகள் குறைவாக இருந்தால், அதனை தபால் ஓட்டு மூலமாகத்தான் சரி செய்வார்கள் எனவும் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் , தலைமை செயலாளரை சந்திக்க செல்வதாகவும், அரசியல் கட்சிகள் ஓட்டுக்கான விலையை உயர்த்தி உள்ளனர் என்றும், முதலீட்டை செய்பவர்கள் போட்ட முதலீட்டை தான் எடுக்க முயற்சி செய்வார்கள் கடமையை செய்ய மாட்டார்கள் என கூறினார்.

மேலும், மக்கள் மத்தியில் சோர்வு ஏற்பட்டுள்ளதால் தான் வாக்குப்பதிவு குறைந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், ம.நீ ம வெற்றி பெற்றுவிடுமோ என எண்ணி, நேர்மைக்கு இடமளிக்காமல் அரசியல் கட்சிகள் காசு கொடுத்துள்ளதாகவும், இது தான் நேர்மை என்றால் இருந்துவிட்டு போகட்டும், இதை விட அசிங்கமாக கூற முடியாது எனவும் குறிப்பிட்டார். தேர்தலில் அராஜகம் தலைவிரித்தாடியதாக குற்றம்சாட்டிய அவர், சாதி மத அரசியல் மட்டுமே பா.ஜ.கவிற்கு தெரியும் என்றும் அந்த களத்தில் ம.நீ ம கட்சி இல்லை எனவும் திட்டவட்டமாக கூறினார்.