The BJP executive and actor SV Shekar was in touch with Twitters customers thinking of merging Mersal.
மெர்சல் படத்தை கலாய்ப்பதாக நினைத்து பாஜக நிர்வாகியும் நடிகருமான எஸ்.வி.சேகர் டிவிட்டர் வாடிக்கையாளர்களிடம் வசமாக மாட்டிக்கொண்டார். அவரையும் பாஜகவையும் விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
அதாவது, இந்த ஆண்டின் சிறந்த COPY & PASTE நிபுணர் யாரு என்று நடிகர் எஸ்.வி சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் மெர்சல் படத்தை கலாய்ப்பது போன்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்த ஒரு விமர்சகர், ஒட்டுமொத்த பா.ஜ.க வையும் இப்டி மொளகாப்பொடிய மூஞ்சில தூவினாப்ல கதறவிட்ட @Atlee_dir தான்.. இன்னும் நல்லா கதறுங்க..உங்க புண்ணியத்துல படம் இன்னும் ரெண்டு நாள் முன்னாடியே நூறு கோடி கலெக்ட் பன்னிடும்.. என தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த பா.ஜ.க வையும் இப்டி மொளகாப்பொடிய மூஞ்சில தூவினாப்ல கதறவிட்ட @Atlee_dir தான்.. இன்னும் நல்லா கதறுங்க..உங்க புண்ணியத்துல படம் இன்னும் ரெண்டு நாள் முன்னாடியே நூறு கோடி கலெக்ட் பன்னிடும்..
— Rockstar AK™ 😎 (@RJAadhi) October 20, 2017
அதேபோல் மற்றொருவர் பதிலளிக்கையில், பாஜக ஐடி விங்.கேரளால சன்னி லியோனுக்கு கூடுன கூட்டத்த அமித் ஷாக்கு புழுவுனதுதான் இந்த ஆண்டின் பெஸ்ட் என தெரிவித்துள்ளார்.
பாஜக ஐடி விங்.கேரளால சன்னி லியோனுக்கு கூடுன கூட்டத்த அமித் ஷாக்கு புழுவுனதுதான் இந்த ஆண்டின் பெஸ்ட்
— வெள்ளந்தி (@im_appavi) October 20, 2017
மேலும் ஒருவர் கூறுகையில், அதாவது சேகரு... உம் மேலயே ட்விட்ட காப்பியடிக்குற பிராது இருக்கு என தெரிவித்துள்ளார்.
அதாவது சேகரு... உம் மேலயே ட்விட்ட காப்பியடிக்குற பிராது இருக்கு 😼😼
— 🐒 (@1nd1ly) October 20, 2017
இதேபொல், சந்தேகமே வேண்டாம்... காங்கிரசின் திட்டங்களின் பெயர்களை மட்டும் மாற்றி புதுத்திட்டமாகக் காண்பித்த மோடியரசுதான்... என குறிப்பிட்டுள்ளார்.
சந்தேகமே வேண்டாம்... காங்கிரசின் திட்டங்களின் பெயர்களை மட்டும் மாற்றி புதுத்திட்டமாகக் காண்பித்த மோடியரசுதான்...
— Chinthan (@epchinthan) October 20, 2017
மோடிதான் காங்கிரஸ் காலத்துல தையதக்கானு எதிர்த்த திட்டத்தை புல்லா 3 வருசத்துல அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணிட்டாப்புல என தெரிவித்துள்ளார் மற்றுமொருவர்.
மோடிதான் காங்கிரஸ் காலத்துல தையதக்கானு எதிர்த்த திட்டத்தை புல்லா 3 வருசத்துல அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணிட்டாப்புல
— Mariselvan (@selvansmart92) October 20, 2017
வேற யாரு. எல்லாம் உங்க சொந்தகாரங்க தான். இந்தியாவுக்கே photoshop முறையே அறிமுகம் பண்ண bjp கட்சி தான் என ஒருவர் பதில் டுவிட் தெரிவித்துள்ளார்.
வேற யாரு
— maddy madhava (@madhavaeshwaran) October 20, 2017
எல்லாம் உங்க சொந்தகாரங்க தான்.
இந்தியாவுக்கே photoshop முறையே அறிமுகம் பண்ண bjp கட்சி தான்
