Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வர வேண்டும்.. சுசீந்திரம் தாணுமலை சுவாமி கோவில் முன்பு சபதம் எடுத்த அமித்ஷா..

கன்னியாகுமரி சுசீந்திரத்தில் " வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம்"  என்ற பாஜக பிரச்சாரத்தை தொடங்கி வைத்து பொன் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த அமித்ஷா இவ்வாறு கூறினார் 

The biggest change must come in Tamil Nadu .. Amit Shah who took the oath before Suchindram Thanumalai Swami Temple ..
Author
Chennai, First Published Mar 7, 2021, 12:50 PM IST

இந்த முறை தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வரவேண்டும் எனவும், தமிழகத்தில் பாரதிய ஜனதா மற்றும் அதிமுக கூட்டணியை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் எனவும் அமித்ஷா கேட்டுக்கொண்டார்.  மேலும் பொன். ராதாகிருஷ்ணனை கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மக்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். 

The biggest change must come in Tamil Nadu .. Amit Shah who took the oath before Suchindram Thanumalai Swami Temple ..

கன்னியாகுமரி சுசீந்திரத்தில் " வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம்"  என்ற பாஜக பிரச்சாரத்தை தொடங்கி வைத்து பொன் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த அமித்ஷா இவ்வாறு கூறினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று காலை நாகர்கோவில் வந்தார். காலை 10 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவிலில் மறவன்குடியிருப்பு பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்திறங்கிய  அமித்ஷா, அங்கிருந்து சுசீந்திரம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.  பின்னர் சுசீந்திரம் நகர மக்களிடம் வெற்றிக் கொடி ஏந்தி வெல்வோம் என்ற பேரணியை தொடங்கி வைத்து பாஜக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். 

The biggest change must come in Tamil Nadu .. Amit Shah who took the oath before Suchindram Thanumalai Swami Temple ..

அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது சுசீந்திரம் தாணுமலை சுவாமி கோவில் முன்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் பாரதிய ஜனதா அதிமுக கூட்டணியை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும், பொன். ராதாகிருஷ்ணனை கன்னியாகுமரி மக்கள் பாராளுமன்ற தொகுதிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்தத் தேர்தல் மூலம் தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றம் வரவேண்டும் என அவர் கூறினார். தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட சுசீந்திரம் பொதுமக்களிடம் அமித்ஷா  துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios