டில்லியில் மாலை 4.30 மணிக்கு ஜெ.பி.நட்டா முன்னிலையில் பாஜ.,வில் இணைகிறார் ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கு.க.செல்வம். 

இதனை சற்றும் எதிர்பாராத திமுக தலைவர் முக, ஸ்டாலின் நிராவிகளுடன் அவச்ர கூட்டம் நடத்த அண்ணா அரிவாலயம் வந்துள்ளார். தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்டோரும் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளனர்.

கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஸ்டாலின் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது. ஆயிரம் விளக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கு.க. செல்வம், மாவட்ட செயலாளர் பதவியை எதிர்பார்த்திருந்ததாக கூறப்படுகிறது. பதவி கிடைக்காததால் டெல்லியில் இன்று மாலை பாஜக தலைவர் நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதற்கு முன்னதாக தமிழக பாஜகவின் தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் இருந்தபோது, வேறு கட்சிகளில் இருந்த தலைவர்களை பாஜகவுக்கு இழுக்கும் காரியத்தை செய்தது இல்லை. ஆனால், தற்போது தலைவராக இருக்கும் எல். முருகன் பதவியேற்ற பின்னர் வேறு கட்சிகளில் இருக்கும் பிரபலங்களை, சினிமா நட்சத்திரங்களை கட்சிக்குள் இழுக்கும் பணியை துரிதமாக, கச்சிதமாக செய்து வருகிறார்.