The banner was torn

தேனி பெரியகுளத்தில் டிடிவி தினகரன் ஆதரவாளர்களால் வைக்கப்பட்ட பேனர் மர்ம நபர்களால் கிழிக்கப்பட்டது. இதனால், தினகரன் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 

வரும் 17 ஆம் தேதி அன்று எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், தேனி மாவட்டம் பெரிய குளம், அகமலை கிராமத்தை சேர்ந்த டிடிவி தினகரன் ஆதரவாளர்கள், மூன்றாந்தல் பகுதியில் பேனர் ஒன்று வைத்திருந்தனர்.

சுமார் 20 அடி நீளம் உள்ள இந்த பேனரை, மர்ம நபர்கள் கிழித்துள்ளனர். இதனால் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். 

அப்போது அவர்கள், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள்தான் பேனரை கிழித்ததாக குற்றம் சாட்டினர். மேலும், பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து தினகரன் ஆதரவாளர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பின்னர் டிடிவி ஆதரவாளர்கள், பேனரை கிழித்த நபர்களை கைது செய்ய வேண்டும் என்று புகார் மனு அளித்தனர். இதனால் மூன்றாந்தல் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

டிடிவி தினகரன் ஆதரவாளர்களால் வைக்கப்பட்ட பேனர், பெரியகுளத்தில் உள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டீக்கடை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.