அரசியலை அதிமுக கேலிக்கூத்தாக்கி வருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக அரசியல் சூழ்நிலையில் தற்போது பரபரப்பின் உச்சத்தை எட்டி வருகிறது. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகள் இணைப்பால் பெரிதும் கலக்கமுற்றது டிடிவி தரப்பு.

டிடிவிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் எம்எல்ஏக்கள் ஒவ்வொருவதாக அவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இன்று வரை டிடிவிக்கு 23 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

எடப்பாடிக்கு அளித்து வந்த ஆதரவை டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்றுள்ள நிலையில், அடுத்து என்ன நிகழும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பரபரப்பான இந்த சூழ்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், அரசியலை அதிமுக கேலிக்கூத்தாக்கி வருவதாக தனது டுவிட்டர் பக்கத்தி பதிவு செய்துள்ளார்.

மேலும், தமிழக ஆளுநர் எங்கே? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 233 எம்எல்ஏக்கள் உள்ளனர். தங்களது பலத்தை செயற்கையாக அதிகரிப்பதற்கான கால அவகாசத்தை ஆளுநர் அனுமதிக்கக் கூடாது என்றும் ப. சிதம்பரம், டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.