The AIADMK leaders have shot the ballooned by the AIADMK.

உயிருள்ள நபர்களின் படங்களை பேனர் வைக்க, சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளநிலையில், அதிமுக தலைவர்களின் படம் பொறித்த பலூனை அதிமுகவைச் சேர்ந்தவர்கள் அத்துமீறி பறக்கவிட்டுள்ளனர்.

தன் வீட்டின் முன் வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற வேண்டும் என கோரி சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த திரிலோக்‌ஷன குமாரி என்ற பெண் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாத, அந்த பேனர்களை அகற்ற உத்தரவிட்டார்.

மேலும், உயிருடன் இருப்பவர்களுக்கு கட் அவுட்கள் வைக்கக்கூடாது. உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்கள் பேனர்களில் இடம்பெறக்கூடாது, போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக பேனர்களோ கட் அவுட்களோ வைக்கக்கூடாது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பேனர்கள், கட் அவுட்கள் வைக்கும் விவகாரத்தில் உள்ளாட்சி நிர்வாகங்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

உயிருள்ள நபர்களின் படங்களை பேனர் வைக்க, சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளநிலையில், அதிமுக தலைவர்களின் படம் பொறித்த பலூனை அதிமுகவைச் சேர்ந்தவர்கள் அத்துமீறி பறக்கவிட்டுள்ளனர்.