Asianet News TamilAsianet News Tamil

37 தொகுதிகளில் தோல்வியை ஈடுகட்ட வேலூருக்கு குறி... வலுவான வேட்பாளரை உறுதி செய்த அதிமுக..!

வேலூர் மக்களவை தேர்தலில் ஏற்கெனவே ஏ.சி.சண்முகம் போட்டியிட்டு இருந்த நிலையில் மறு தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வைகைசெல்வன் உறுதிபடுத்தி உள்ளார். 

The AIADMK has confirmed the strong candidate
Author
Tamil Nadu, First Published Jul 4, 2019, 6:43 PM IST

வேலூர் மக்களவை தேர்தலில் ஏற்கெனவே ஏ.சி.சண்முகம் போட்டியிட்டு இருந்த நிலையில் மறு தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வைகைசெல்வன் உறுதிபடுத்தி உள்ளார். The AIADMK has confirmed the strong candidate

வேலூர் மக்களவைத் தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு வேலூர் தேர்தல் குறித்து அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன் கூறுகையில், வேலூரில் ஏற்கனவே நடைபெற இருந்த தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த தொகுதிக்கு தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலை சந்திக்க அஇஅதிமுக தயாராக இருக்கிறது.The AIADMK has confirmed the strong candidate

ஏற்கனவே அந்த தொகுதியில் கூட்டணி கட்சியில் வேட்பாளராக ஏ.சி.சண்முகம் நிறுத்தப்பட்டிருந்தார். தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால் இதுகுறித்த அறிவுப்பு தலைமை கழகத்தில் இருந்து வெளிவரும். இந்த தேர்தலில் அஇஅதிமுக மிகப்பெரிய வெற்றியை பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஏ.சி.சண்முகத்திற்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும்.The AIADMK has confirmed the strong candidate
 
சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆளும் அதிமுகவுக்கு 9 தொகுதிகளில் வெற்றியை பொதுமக்கள் வழங்கியுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அஇஅதிமுக மிகப்பெரிய வெற்றியை பெறும்’ என அவர் தெரிவித்தார்.  

Follow Us:
Download App:
  • android
  • ios