The 50 year dream of the people is fulfilled Prime Minister Modi is proud

நாட்டின் மிக நீளமான 9.15 கி.மீ. பாலத்தை பிரதமர் மோடி, அசாமில் இன்று திறந்து வைத்தார். தின்சுகியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தோலா - சதியா பாலம், பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது.
இதையடுத்து பிரதமர் மோடி, 50 ஆண்டு மக்களின் கனவு நிறைவேறியது என பேசினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:- 
அசாம் மற்றும் இமாச்சல் பிரதேச மக்கள், பல ஆண்டுகளாக எதிர்பார்த்த பாலம் இன்று திறக்கப்பட்டுள்ளது. தற்போது மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதை நான் பார்க்கிறேன்.
கடந்த 2003ம் ஆண்டு, வாஜ்பாய் ஆட்சி காலத்தில், இதே பாலத்தை கட்ட வேண்டும் என பிரதமரிடம் பாஜக எம்எல்ஏக ஜெகதீஷ் கடிதம் கொடுத்தார். அதற்கு வாஜ்பாய் அனுமதி வழங்கினார். ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், பாலப்பணிகள் கிடப்பில் போடப்பட்டது.
தற்போது, வாஜ்பாய் அரசின் கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பாலத்திற்காக 50 வருடங்களாக மக்கள் காத்திருந்தனர். காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி முடக்கப்பட்டு இருந்தது. நாட்டின் கனவை நாங்கள் நிறைவேற்றியுள்ளாம்.
இந்த பாலம் இரு மாநிலத்தின் வளர்ச்சியை இணைக்கிறது. அசாமில் பாஜ ஆட்சி அமைந்து ஒரு ஆண்டுக்குள் பல பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளன. இதேபோல், அனைத்து இந்தியர்களின் கனவுகளையும் நாங்கள் நிறைவேற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.