புயல் நிவாரண பணி சரியில்லை! என்று அரசை ஒருபுறம் திட்டிக் கொண்டே, இடைத்தேர்தலுக்கான பணிகளில் இன்னொரு புறம் முழு வேகம் காட்டிக் கொண்டிருக்கிறது தினரன் அணி. 

இந்த சைலண்ட் நகர்வுகள் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கும் அ.ம.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளரான தங்கதமிழ்ச்செல்வன்...”சில சந்தேகங்கள் இருந்தாலும் கூட இடைத்தேர்தலை எதிர்கொள்ள் முழு வீச்சில் தயாராகி வருது எங்க கட்சி. இப்பவும் சொல்றேன், அ.தி.மு.க.வின் 90% தொண்டர்கள் எங்க பக்க்மதான் இருக்கிறாங்க. அதனால் புதிய உறுப்பினர் சேர்க்கையை ஒரு புறம் நடத்திக் கொண்டே, பூத் கமிட்டி அமைக்கும் வேலைகளையும் பார்த்துட்டு இருக்கிறோம்.

இந்த இடைத்தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால் துரோக கும்பல் விரட்டி விடப்படும். பல அமைச்சர்கள் எங்க பக்கம் வந்து சேருவாங்க, பல நிர்வாகிகள் அணி மாறி வருவாங்க. தேர்தல் வெற்றி பெற்றால் மட்டுமில்லை, சின்னம்மா வெளியில் வந்தாலும் கூட போதும். இப்போ இருக்கும் அமைச்சர்களில் பலரும் வந்து பார்த்து, மரியாதை பண்ணிடுவாங்க. 

குறிப்பா அமைச்சர் செல்லூர் ராஜூ நிச்சயம் வருவார் பாருங்க. அவரே ‘எனக்கு எப்பவுமே சின்னம்மாதான்!’ அப்படின்னு சொல்லியிருக்கிறாரே. அதுமட்டுமில்லாம, ‘இந்த இயக்கத்தை ஒரு பெண் தான் எதிர்காலத்தில் ஆட்சி செய்வார்!’ அப்படின்னும் அவர் சொல்லியிருக்கார். அதனால சின்னம்மா வந்ததும், முதல் ஆளா செல்லூரார் வருவார். அவர் கூடவே மேலும் சில அமைச்சர்களும் வருவாங்க. இது நடக்கும் நிச்சயம்.” என்றிருக்கிறார். 
கவனிக்குறோம்ணே!