ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் பழனிசாமி.

காவேரி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை இன்று காலை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று, திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார்.

பின்னர் அங்கிருந்து, புறப்பட்ட பழனிசாமி நேராக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனை சந்தித்து நலம் விசாரித்தார்.

மேலும் தொடர்ந்து பல கட்சித்தலைவர்கள் தா. பாண்டியனை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகிறார்.