டெல்லியில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்திற்கு சென்னையில் இருந்து நன்றி தெரிவித்து கொண்டுள்ளார் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின். 

இது தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’’வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிற தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும். தொலை தொடர்பு துண்டிப்பும் மக்கள் நிம்மதியாக வாழ சுமூகமான சூழலை காஷ்மீரில் உருவாக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தான் டெல்லியில் அனைத்து கட்சிகளை அழைத்து  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக அமைழப்பை ஏற்று காங்கிரஸ் திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதாள கட்சி உள்ளிட்ட 14 கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், தலைவர்களும் கலந்து கொண்டனர். 

இந்த ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக  நடந்து முடிந்து இருந்திருக்கிறது. ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. அரசியல் பலிவாங்கும் படலத்தில் இந்த கைது நடந்து இருக்கிறது. அவர் முறையான விசாரணைக்கு சென்று வந்திருக்கிறார். உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கேட்டுள்ளார். அது வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில் அவரை அவசரப்பட்டு கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. 

முறையாக உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்றே திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. திமுகவால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதாக கூறுவது தவறு. மக்கள் இதனை தவறாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். டெல்லியில் போராட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சிகளுக்கும் நன்றி’’ என அவர் தெரிவித்தார்.