உடல் நலன் குறித்து அக்கறையுடன் விசாரித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி என திமுக எம்.பி.யும் மகளிரணி செயலாளருமான கனிமொழி கூறியுள்ளார்.

உடல் நலன் குறித்து அக்கறையுடன் விசாரித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி என தி.மு.க. எம்.பி.யும் மகளிரணி செயலாளருமான கனிமொழி கூறியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

மக்களவை உறுப்பினரும், திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழி அக்கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது, திருநெல்வேலி மாவட்டத்தில் கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்ட அவருக்கு லேசான காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதால் உடனடியாக கனிமொழி சென்னை திரும்பினார். 

இதையடுத்து, அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானதையடுத்து கனிமொழி தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டிருந்தார். அதன்பின்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

Scroll to load tweet…

இந்நிலையில், திமுக எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- எனக்கு கோவிட்- 19 தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். மருத்துவமனையில் எனக்குத் தேவையான மருத்துவ உதவிகள் அளிக்கப்படுகின்றன. எனது உடல் நலன் குறித்து அக்கறையுடன் விசாரித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி!" என பதிவிட்டுள்ளார்.