தொடர்ந்து ஓபிஎஸ்ஸை அவமானப்படுத்தி ஓரம் கட்டும் வேலைகளை தினகரனின் கிரீன் சிக்னலோடு செய்கிறாரா அல்லது தனிப்பட்ட பகையைத் தீர்த்துக்கொள்வதற்காக கேம் ஆடிவிட்டு தினகரனை அதற்கு தலையாட்ட வைக்கிறாரா என்கிற சந்தேகம் சில நாட்களாக அதிமுக வட்டாரத்தில் அரசல்புரசலாக நடமாடிவருகிறது.

பன்னீர் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் இருவருமே தேனி மாவட்டத்தில் அரசியல் செய்பவர்கள். பெரியகுளம் எம்.பி தொகுதியில் தினகரன் போட்டியிட்டபோது இருவருமே தங்கள் தனித்தனி செல்வாக்குகளால்  அவருக்குப் பக்கபலமாக நின்றார்கள்.

ஆனால் அரசியலில் அடி எடுத்து வைத்த காலத்திலிருந்தே இருவருக்குமே தேனி மாவட்ட அ.தி.மு.க-வில் கடும் பகை. இதில் ஒவ்வொரு முறையும் சரியான காய்கள் நகர்த்தி, ஜெயித்து, அமைச்சர், முதல்வர் என உயர்ந்தவர் பன்னீர்தான்.

பன்னீர் இனி தங்களுடன் இல்லை என்று தினகரன் வட்டாரத்தில் தங்க தமிழ்ச்செல்வனுக்கென்று தனி செல்வாக்கு ஏற்பட்டுவரும் நிலையில், இப்போது மீண்டும் தினகரனிடம் பன்னீர் நெருக்கம் காட்ட ஆரம்பித்திருப்பதை தங்க தமிழ்ச்செல்வன் ரசிக்கவில்லை என்கிறார்கள்.இதுபோக  பழைய பகையைத் தீர்த்துக்கொள்ளும் வகையிலும், மீண்டும் தினகரனுடன் நெருங்கிவிடக்கூடாது என்பதற்காகவும் தங்க தமிழ்ச்செல்வனே இந்த விஷயங்களையெல்லாம் வெளியிட்டுவிட்டார். 

வேறு வழியில்லாமல் தினகரனும் வழிமொழிந்துவிட்டார் என்றும் ஒரு பேச்சும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆக பன்னீர் என்னும் பந்தை உதைத்து ஆளாளுக்கு கோல் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.