அமமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன், அக்கட்சியின்  பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்க வலது கரமாக செயல்பட்டு வந்தார். அப்படிப்பட்டவர்,  கடந்த ஜூன் 28ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தற்போது தங்கத் தமிழ்செல்வன் திமுகவில் இணைந்து இரண்டு வாரம் கடந்துவிட்டது. அமமுக நிர்வாகிகளை திமுகவுக்கு கொண்டுவந்து தேனியில் இணைப்புக் கூட்டம் நடத்துவதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுவந்தவர் தற்போது திடீரென அமைதி காக்கத் தொடங்கிவிட்டார்.

இதுதொடர்பாக தனது ஆதரவாளர்களிடம் பேசிய தங்கதமிழ் செல்வன், அமமுகவில் இருந்தபோது யானை பலமாக இருந்தது. மீடியாக்களும் ஓயாமல் தங்கம், தங்கம்னு என்ன பத்தி நியூஸ் போட்டாங்க. ஆனால், திமுகவுக்கு போனதிலிருந்து எந்த மீடியாவும் என்னைக் கண்டுகிறதில்ல. அமமுகவுல பணம் வாங்கித்தான் செலவுகள் செஞ்சோம். அங்க மரியாதையும் இருந்தது. ஆனா, திமுகவுல யாரும் மதிக்கமாட்டேங்குறாங்க. தனித் தனிக் குழுவா இருக்குறவங்க என்னையும் தனித்துதான் பார்க்கிறாங்க’ என்று புலம்ப்த தள்ளியுள்ளார்.

ஆனால் அவருக்கு ஆறுதல் சொன்ன ஆதரவாளர்கள், தொடக்கத்தில் இப்படித்தான் இருக்கும், போகப் போக எல்லாம் சரியாகிவிடும் என்று கூறி சமாதானம் செய்திருக்கிறார்கள். ஆதரவாளர்கள் சொன்னது போல் போகப்போக சரியாகுமா ? அல்லது தங்கம் வேறு இடம் தேடுவாரா?