நேற்று நடந்த ஆலோசனைக்கு கூட்டத்தில்  தங்க தமிழ்ச் செல்வன், கூட்டத்திற்குப் பின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கூட தினகரனுடன் வந்து நிற்பதை தவிர்த்துவிட்டு, அவசர அவசரமாக கிளம்பிசென்றதாக அக்கட்சி உள்ளவர்கள் கூறுகின்றனர்.

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் சந்தித்த படுதோல்வியையடுத்து கடந்த மாதம் 28ம் தேதி சிறையில் உள்ள சசிகலாவை நேரில் சந்தித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் ஆலோசனை நடத்தினார். இந்தநிலையில், தேர்தல் தோல்வி, உள்ளாட்சி தேர்தலில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் சென்னை அசோக் நகரில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில்  தினகரன் தலைமையில் நடைபெற்றது. 

அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அசோக் நகரில் உள்ள தலைமை கழகத்தில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் தினகரன் தலைமை வகித்தார். வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், பழனியப்பன், உள்ளிட்ட  முக்கிய நிர்வாகிகள்  கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் தேர்தல் தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து வேட்பாளர்கள் தினகரனிடம் நேரடியாக குற்றச்சாட்டை முன்வைத்தனர். குறிப்பாக, கட்சி கொடுத்த பணத்தை நிர்வாகிகள் முறையாக செலவு செய்யவில்லை. நிர்வாகிகள் ஒத்துழைப்பு கொடுக்காததால் தான் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. பரிசு பெட்டகம் சின்னத்தை பொதுமக்களிடம் கொண்டுபோய் சேர்க்க முடியவில்லை. எனவே, குக்கர் சின்னத்தை பெற மீண்டும் முயற்சிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். 

இனி வரும் தேர்தல்களில் கூட்டணி அமைத்து போட்டியிட தலைமை முடிவு செய்ய வேண்டும் எனவும் தினகரனிடம் முக்கிய வேட்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதேபோல், தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் அமமுகவில் முக்கிய நபராக உள்ளார்.

தேர்தலில் தோல்வியடைந்த அத்தனை வேட்பாளர்களும், நிர்வாகிகளும் தங்கள் தொகுதியில் நடைபெற்ற பிரச்னைகள் பற்றி தினகரனிடம் புகார் தெரிவித்த போதும், ஆண்டிபட்டி தங்க தமிழ்செல்வன் மட்டும்  எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்துவிட்டாராம். இந்த ஆலோசனைக்கு கூட்டம் முடிந்த சில நிமிடங்களில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூட தினகரன் உடன் வந்து நிற்பதை தவிர்த்துவிட்டு, தினகரனிடம் கூட எதுவுமே சொல்லாமல், அவசர அவசரமாக கிளம்பிசென்றதாக அக்கட்சி உள்ளவர்கள் கூறுகின்றனர்.