மேக்கப் போடுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு பட்டப்பெயர் வைத்து உடன்பிறப்புகள் அழைக்க ஆரம்பித்து உள்ளனர்.

தென் சென்னை தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடுபவர் தமிழச்சி தங்கபாண்டியன். அழகான வேட்பாளரான தமிழச்சி தங்கபாண்டியனை வெற்றிபெறச் செய்யுங்கள் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியதால் சர்ச்சை ஏற்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த தமிழச்சி தங்கப்பாண்டியனின் அழகுக்குக் காரணம் மேக்கப் தான் என்று உடன்பிறப்புகளே கமெண்ட் அடிக்க ஆரம்பித்துள்ளனர். 

காலை 7 மணிக்கெல்லாம் பிரச்சாரத்தை துவங்கலாம் என்று கூறினாலும் தமிழச்சி பிரச்சாரத்திற்கு புறப்படுவதற்கு 9 மணிக்கு மேல் ஆகி விடுகிறது என்கின்றனர் திமுக நிர்வாகிகள். இதற்கு காரணம் தமிழச்சியின் மேக்கப்புக்கு மட்டுமே இரண்டு மணி நேரம் ஆகிறதாம். அதோடு மட்டுமல்லாமல் பிரச்சாரத்திற்கு இடையிடையே மேக்கப் போடுவதற்கு என்று தமிழச்சி புறப்பட்டுச் சென்று விடுவதாகவும் ஒரு புகார் உள்ளது.

இதனால் பொறுத்து பொறுத்து பார்த்த உடன் பிறப்புகள் ஒரு கட்டத்தில் தமிழச்சியை மேக்கப் பைத்தியம் என்று தங்களுக்குள்ளாக பேச ஆரம்பித்துள்ளனர். மேக்கப் போடுவது தவறில்லை ஆனால் எப்போதுமே மேக்கப்போடு இருப்பது எப்படி சரியாக இருக்கும் என்று திமுக நிர்வாகிகள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் அவர்களுக்கெல்லாம் தெரியாது மேக்கப் போடாமல் தமிழச்சி வெளியே வந்தால் அவரை யாருக்குமே அடையாளம் தெரியாது என்று.