பாஜகவுடன் இணைந்தால், அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவேன் என்று மனிதநேய ஜனநாயக கட்சி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி கூறினார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் நாகை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி, பரமக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது.

அதிமுகவில் பிளவு ஏற்பட்டு, 3 அணிகளாக பிரிந்து காணப்படுகிறது. இதுபோன்று ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் பிரிந்து இருப்பது கவலையும், வேதனையும், வருத்தத்தையும் அளிக்கிறது. இந்த 3 அணிகளும் ஒன்றுசேர வேண்டும் என்பதே எனது விருப்பம். என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார். 

அதிமுக, பாஜகவுடன் கூட்டணி சேர உள்ளதாக தகவல்கள் வருகின்றன.. பாஜகவுடன், அதிமுக கூட்டணி வைக்கும் பட்சத்தில், அந்த அணியில் இருந்து எங்களது கட்சி விலகும் என  என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.

மேலும்,. தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு திராவிட கட்சிகள் வலிமையாக இருப்பது அவசியம். திராவிட கட்சிகளை வலிமை இழக்க செய்ய பாஜக மேற்கொண்டு வரும் முயற்சிகள் கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.