மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக அமைச்சருமான தம்பிதுரை பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.

பரபரப்பான இக்கட்டான இந்த அரசியல் சூழ்நிலையில் மோடியை சந்திக்க பலமுறை நேரம் கேட்டும் இன்றுதான் தம்பிதுரைக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஓ.பி.எஸ் தரப்பு ஆட்சி அமைப்போம், மெஜாரிட்டியை நிரூபிப்போம் என மார்தட்டும் இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்திலேயே பிரதமரை சந்தித்து விட்டார் தம்பிதுரை.

அவருடன் அதிமுக குழுத்தலைவர் வேனுகோபால், நவநீத கிருஷ்ணன். பாலசும்ப்ரமனியம் உள்ளிட்ட பலர் பிரதமரை சென்று சந்தித்தனர்.

தமிழக அரசியல் நிலவரம் குறித்து பிரதமரிடம் பேசியதாக தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

ஆனால் சசிகலா பதவியேற்பது குறித்து ஆளுநர் தரப்பு சிக்கல்களை நீக்கி தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் சசிகலா ஆட்சி அமைக்க தேவையான எம்.எல்.ஏக்கள் தங்களிடம் இருப்பதாகவும் தம்பிதுரை மோடியிடம் தெரிவித்துள்ளார்.