நீட் தேர்வில்  இருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்குமா? அல்லது கிடைக்காதா என உறுதியாக சொல்ல முடியாது என்றும் தன்னால் மாணவர்களுக்கு பொய்யான வாக்குறுதியை கொடுக்க முடியாது என நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நழுவல் பதில் அளித்துள்ளார்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்‍கு அளிக்கும் தமிழக அரசின் சட்ட மசோதாக்‍களுக்‍கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற நடவடிக்‍கை எடுக்‍க வலியுறுத்தி, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜாவ்டே‍கர், ஜே.பி. நட்டா, ரவி சங்கர் பிரசாத்  ஆகியோரை  தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் எம்.பிக்கள் சிலர்  சந்தித்துப் பேசினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, நீட் தேர்வுக்கு காரணமே காங்கிரஸ் – திமுக கூட்டணி அரசுதான் என குற்றம்சாட்டினார்.

நீட் தேர்வால் தமிழகத்தைச் சேர்ந்த 5 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இப் பிரச்சனையில் தமிழக மாணவர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாகவும் தம்பிதுரை கூறினார்.

நீட் தேர்வி விவகாரத்தில் தமிழக சட்டப் பேரவையில் கொண்டு வரப்பட்ட சட்டமசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றுத்தர பிதரமரிடம் வலியுறுத்தியாக தெரிவித்தார்.

பிரதமரும் இப்பிரச்சனையில் சட்ட அமைச்சகத்துடன் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பதாக அறிவித்துள்ளார் என தம்பி துரை கூறினார். நீட் தேர்வு பிரச்சனையில் பிரதமர் மீது எந்தத் தப்பும் இல்லை என்றும் தம்பிதுரை தெரிவித்தார்

தொடர்ந்து பேசிய அவர் நீட் தேர்வில்  இருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்குமா ? அல்லது கிடைக்காதா என உறுதியாக சொல்ல முடியாது என்றும் தன்னால் மாணவர்களுக்கு பொய்யான வாக்குறுதியை கொடுக்க முடியாது என நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நழுவல் பதில் அளித்துள்ளார்.