பாஜகவை வசைபாடி வந்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தனது ரூட்டை மாற்றி திமுகவை கடுமையாக தாக்கியுள்ளார்.  ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் திமுகதான் என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.  

பாஜகவை வசைபாடி வந்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தனது ரூட்டை மாற்றி திமுகவை கடுமையாக தாக்கியுள்ளார். ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் திமுகதான் என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கரூரில் செய்தியாளர்களை சந்தித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, ‘’மக்களின் தேவைகளை அறிந்து அதனை நிறைவேற்றும் அரசாக தமிழக அரசு இருக்கிறது. கரூர் தொகுதியில் தான் எம்.பி.யாக இருக்கிறேன். எனவே மீண்டும் கரூர் தொகுதியில் போட்டியிடவே விருப்ப மனு கொடுத்துள்ளேன். அதிக எம்.பிக்களை கொண்ட கட்சி தான் நாட்டின் பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும். அந்த சூழல் திமுகவுக்கு இல்லை.

மக்களவை தேர்தலில் திமுக தமிழகத்தில் ஒரு இடத்திலும் வெல்ல முடியாது. மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்துக் கொண்டுதான் சுற்றுப்பயணம் செய்கிறாரே தவிர, மக்களவை தேர்தலை மனதில் வைத்து அல்ல. யார் இந்த நாட்டின் பிரதமர் என சொல்லும் அளவுக்கு திமுக இருப்பதாக தெரியவில்லை.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட காரணமே திமுக தான். அவர்கள் தொடர்ந்த வழக்கினால்தான் மனஉளைச்சலுக்கு ஆளாகி உடல்நலம் பாதிக்கப்பட்டது. ஜெயலலிதா இறப்புக்கு காரணமான திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அரசை கேட்டுக்கொள்கிறேன்’’ என அவர் தெரிவித்தார்.