thalavai sundaram pressmeet about income tax raid

சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கள், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி, சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் ஆகியோரது வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் தற்போது, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டுக்கு சென்றார். அங்கு வீட்டின் முன் பக்க கேட் மூடப்பட்டு, மத்திய பாதுகாப்பு போலிசார் இருந்தனர்.

அவர்களிடம், கதவை திறக்க வலியுறுத்தி, அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் மற்றும் தளவாய் சுந்தரம் ஆகியோர் கோஷமிட்டனர். நீண்ட நேர வாக்குவாதத்துக்கு பின், தளவாய் சுந்தரத்தை மட்டும் உள்ளே அனுமதித்தனர்.

முன்னதாக தளவாய் சுந்தரம், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்துவது, அரசியல் சூழ்ச்சிதான் காரணம். அவர் ஆர்கே நகர் தொகுதியில் தேர்தல் பணிமனை அமைத்து தீவிரமாக வேலை செய்து வருகிறார். அதனை தடுக்கவே வருமான வரித்துறையினர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

வருமான வரித்துறை அதிகாரிகள், அதிமுக என்ற இயக்கத்தை அழிக்க முயற்சிக்கின்றனர். இதற்காகவே சதி செய்கின்றனர்.

தேர்தல் நேரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டை குறி வைத்து, சோதனை நடத்துவதற்கு எதற்கு என வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர். காலை 6 மணி வரை தற்போது வரை அவர்கள் ஏன் ரெய்டு நடத்துகிறார்கள்.

ஆர்கே நகரில் எங்களது வேட்பாளர் டி.டி.வி.தினகரன் வெற்றி பெறுவது உறுதி. ரெய்டு நடத்திய இடத்தில் ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை. இதனால் அமைச்சர் விஜயபாஸ்கரை, வருமான வரித்துறையினர் மிரட்டுகின்றனர்.

வருமான வரித்துறையினரின் சோதனைக்கும், மிரட்டலுக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம். இந்த இயக்கம் ஜெயலலிதாவின் இயக்கம். இதனை அழிக்க சதி நடக்கிறது. அதற்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம் என்றனர்.