Asianet News TamilAsianet News Tamil

பட்ட பகலில் மதுரையில் நடந்த பயங்கரம்.. 150 பவுன் நகை கொள்ளை.. மோப்பநாயுடன் வந்து போலீஸ் விசாரணை..

மதுரையில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 150 பவுன் நகை மற்றும் 6 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Terror in Madurai on day time. 150 Savran jewelery robbery .. Police investigation with Moppanai ..
Author
Chennai, First Published Feb 5, 2021, 11:22 AM IST

மதுரையில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 150 பவுன் நகை மற்றும் 6 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பைக்ரா EB காலனி பகுதியில் குடும்பத்துடன் முருகன் - காளிஸ்வரி தம்பதிகள் வசித்து வருகிறார்கள், இதில் முருகன் என்பவர் வாடிப்பட்டி அருகே தனியார் டிராக்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

 Terror in Madurai on day time. 150 Savran jewelery robbery .. Police investigation with Moppanai ..

இந்நிலையில் நேற்று மதியம்  முருகனின் மனைவி காளிஸ்வரி தனது பிள்ளைகளை பள்ளிக்கூடத்தில் இருந்து அழைத்து வர விட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். அவர் திரும்பி வந்து பார்த்த பொழுது விட்டின் பொருள்கள் அனைத்தும் கலைந்த  நிலையில், இருந்ததுள்ளது. இதை பார்த்து பதற்றமடைந்த அவர், வீட்டில் பின் புறம் கதவு திறந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் ஓடி போய் பீரோவை பார்த்தபோது பிரோவில் வைத்திருந்த 150 பவுன் தங்க நகை 6 லட்சம் பணம் கொள்ளை போனது தெரியவந்தது. நகைகள் கொள்ளை போனதை தெரிந்து கொண்ட அவர், உடனே சம்பவம் குறித்து சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். 

Terror in Madurai on day time. 150 Savran jewelery robbery .. Police investigation with Moppanai ..

இடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மோப்பநாய், கைரேகை நிபுணர்களுடம் வந்து தடயங்களை சேகரித்தனர். கொள்ளையடித்த மர்ம நபர்களை யார் என்பதை குறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து விராசரணை நடத்தி வருகின்றனர்.  அதில் அக்கம் பக்கத்தில் உள்ள CCTV கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர். மதுரையில் பட்டப் பகலில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகைகள், பணம் திருடு போனது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios