நடிகை ரஞ்சிதாவை நித்யானந்தா எப்படி வசியம் செய்தார் என்ற  ரகசியத்தை தெலுங்கு சினிமாவின் பிரபல  எழுத்தாளரும் வசனகர்த்தாவுமான பரிச்சுரி கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் நித்தியானந்தா என்றாலே நமக்கு உடனே நினைவுக்கு வருவது நடிகை ரஞ்சிதாதான் அவர்கள் இருவரும் தனிமையில் இருப்பது போன்ற அந்தரங்க வீடியோ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது .  அன்றிலிருந்து நித்யானந்தா மீது பணமோசடி ,  பாலியல் புகார் ,  ஆள் கடத்தல் ,  என அடுக்கடுக்கான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன, இந்நிலையில் அவரை இன்டர்போல் போலீஸ் தேடும் அளவிற்கு அவர் மீதான குற்றங்கள் அதிகரித்துள்ளன .

நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் நடிகை ரஞ்சிதா தான் ராஜமாதா எனவும் ,  அவர் கண்ணசைவின்றி ஒரு காரியமும் அங்கு நடக்காது எனவும் ஆசிரமத்தில் இருந்து வெளியேறிய பெண்கள் தெரிவிக்கின்றனர் முக்கிய புள்ளிகளை சந்திக்க அவர்தான் மூலையாக செயல்படுவார் , அவரிடம் டன் கணக்கில் நகைகள் இருக்கிறது என அடுக்கடுக்கான தகவல்கள் வந்து கொண்டே இருக்கிறது .    இந்நிலையில் நடிகை ரஞ்சிதா குறித்து தெரிவித்துள்ள தெலுங்கு திரைப் பட எழுத்தாளரும்,   பரிச்சூரி கோபாலகிருஷ்ணன் என்  மகளும் ரஞ்சிதாவும் நல்ல தோழிகள், அவரிடம்  நல்ல திறமைகள் இருப்பதை அறிந்த நான் கடப்பா ரெட்டம்மா  என்ற திரைப்படத்தில் அவரை நடிக்க வைத்தேன் ,  ஒரு முறை ரஞ்சிதா என்னை சந்தித்த போது நித்யானந்தா அட்டைப் படம் போட்ட புத்தகம் ஒன்றை கொடுத்தார் . 

அப்போது எதுவும் சொல்லாமல் அமைதியாக  வாங்கிக் கொண்டேன் ,  நான் அப்போதே அந்த பெண்ணை கண்டித்து இருந்தால் அவர் இந்த நிலைக்கு மாறி இருக்க மாட்டார் .  அந்தப் பெண்ணிடம் நல்ல திறமைகள்  இருக்கிறது .  அவருக்கென்று தனி இடத்தை சினிமாவில் அவர் பெற்றிருக்க முடியும். இன்னும் அவருக்கான இடம் உள்ளது.  அந்தப் பெண் அதிகம் புத்தகம் படிக்கும் ஆர்வம் உள்ளவர் .  சென்னை சாலிகிராமத்தில் உள்ள  தன்னுடை  மூன்றடுக்கு வீட்டில் ஒரு மாடியில் முழுவதும் புத்தகங்களை அடுக்கி நூலகமாக மாற்றியுள்ளார் ,  அவர் அதிகம் புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவர்  என்பதால் நித்யானந்தாவின் புத்தகங்களை படித்து  தான் அவர்  நித்யானந்தா வலையில் விழுந்தார் என  தெரிவித்துள்ளார் அவர்.