ஆந்திர மாநிலத்துக்கு தனி அந்தஸ்து வழங்குவதாக உறுதி அளித்துவிட்டு மோடி அரசு அதை நிறைவேற்றவில்லை எனக் கூறி தேசிய கூட்டணியில் இருந்த தெலுங்கு தேச கட்சி  வெளியேறியது. இதையடுத்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பாஜக அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது. இது தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த விவாதத்தில் பங்கேற்று தீப்பொறி பறக்க பேசினார். அவரது பேச்சை காங்கிரஸ் கட்சியினர் மட்டுமல்லாமல் பிரதமர் மோடியும் பாராட்டினார்.

இந்த விவாதத்துக்கு பிரதமர் மோடி  பதில் அளித்து பேசினார்.. இதையடுத்து  தெலுங்கு தேசம் கட்சியின் எம்பி கேசினேனி ஸ்ரீனிவாஸ் பேசினார்.

அப்போது மோடி ஆற்றிய உரை ஒன்றரை மணிநேரம் பாலிவுட் பிளாக்பஸ்டர் படம் பார்த்தது போல் இருந்தது என்று பலத்த சிரிப்புக்கிடையே தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், . உலகின் சிறந்த நடிகர் மோடிதான் என்பதில், எனக்கு எந்த சந்தேகமில்லை என்றார்.  இதற்கு, எதிர்க்கட்சியினர் அனைவரும் ஆரவாரத்துடன் ஆதரவளித்தனர்