பணியாற்றும் பள்ளிக்கு ஆசிரியர்கள் 21ம் தேதி பணிக்கு திரும்ப வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜீன் 1ம் தேதி பத்தாம்வகுப்பு தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக அந்தந்த பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் வெளியூர்களில் இருந்தாலும் 21ம் தேதிக்குள் பள்ளிக்கூடம் இருக்கும் மாவட்டத்திற்குள் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.வெளி மாவட்டத்தில் இருக்கும் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்.


மாணவர்கள் பட்டியலை சரிபார்த்து மாணவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்றும் வெளியூர்களில் இருந்தால் அவர்களை அழைத்து வர ஈ.பாஸ் மூலம் அவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்து கொடுக்கவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் தேர்வுக்கான அனைத்து முன்னேற்பாடுகளை செய்யவும் உத்தரவில் தெரிவித்துள்ளது. பள்ளிக்கு திரும்பிய ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் பட்டியலை 21ம் தேதி காலை 11மணிக்கு பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்ப வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கொரோனா தொற்று தாக்குதல் குறையும் போது தேர்வை நடத்திக்கொள்ளலாம் என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.