அத்தி வரதர் தொடர்பாக வால்போஸ்டர் அடித்துள்ள ஆர்எஸ்எஸ் இயக்கம், அதில் வடதமிழகம், தென் தமிழகம் என அச்சடித்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க பாஜக முடிச செய்துள்ளதாகவும் தகல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தில் தற்போது மாவட்டங்கள் அதிகமாக பிரிக்கப்பட்டு வருகின்றன. எதற்காக பிரிக்கிறார்கள்? என்று தெரியவில்லை. நிர்வாக வசதிக்காக பிரிக்கலாம். ஆனால்  இவர்கள் காஷ்மீரை போல தமிழகத்தை 2-ஆக உடைக்க வாய்ப்புள்ளது என குற்றம்சாட்டினார்.

அதே நேரத்தில் பாஜக சாதிய கட்சிகளை அதிகமாக நம்புவதாகவும்,  அதனால் தமிழகத்தை வட தமிழகம், தென் தமிழகம் என 2 ஆக பிரித்து விடுவார்கள் எனவும் சீமான் தெரிவித்தார். .சென்னையை , புதுச்சேரி போல யூனியன் பிரதேசமாக மாற்றுவார்கள் என்று குற்றம்சாட்டிய சீமான்  தமிழகத்தை 2 ஆக பிரிப்பது அவசியமற்றது. அதை விடவும் கூடாது என கொந்தளித்தார்..

மாநிலங்களை 2 ஆக பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால் இவர்கள் பிரிக்க வேண்டியது நியாயமாக அதிக தொகுதிகள் கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தை தான் என்றும் சீமான் தெரிவித்தார்..