விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் விவசாயிகளிடமிருந்து டன் கணக்கில் தமிழக அரசு காய்கறிகளை நேரடி கொள்முதல் செய்து அரசு தோட்டக்கலை மூலமாக பொதுமக்களுக்கு மலிவு விலையில் காய்கறி தொகுப்புகளை வழங்கப்படுகிறது .  இது மக்களுக்கு மிகுந்த பயனளித்து வருகிறது . விவசாயிகளும் போதிய லாபத்துடன்   பயனடைந்து வருகின்றனர். கொரோனா மக்களை அச்சிறுத்தி வரும் நிலையில்,  பொதுமக்களிடையே மலிவு விலை காய்கறி தொகுப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில்  ஏராளமானோர் இந்த வைரசுக்கு  உயிரிழந்து வருகின்றனர். 


இந்நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.  இந்த வைரஸ் சமூக பரவலாக மாறுவதை தடுக்க  தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு  வருகிறது.  தமிழக அரசின் சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவின்படி பொதுமக்கள் அதிகம் கூடாத  வண்ணம் ,  பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக காய்கறி சந்தையில் ஒன்றாக கூடும்போது நோய் தொற்று ஏற்பட்டு விடும் என்ற காரணத்தால் அவற்றினை தடுக்க தமிழக முதல்வரின் ஆணைப்படி விவசாயிகளிடமிருந்து அரசு தோட்டக்கலை துறையின் மூலம் காய்கறிகளை நேரடியாக கொள்முதல் செய்து அவற்றினை மலிவு விலையில் அதாவது  100 ரூபாய்க்கு 12 வகையான காய்கறிகளை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.  இந்த திட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 100 ரூபாய்க்கு கொடுக்கின்ற இந்த சிறப்பு காய்கறி தொகுப்பில் கத்தரிக்காய், வெண்டைக்காய், பீட்ரூட் , வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, எலுமிச்சை, மாங்காய், முட்டைக்கோஸ், புடலங்காய், முருங்கை, கறிவேப்பிலை, கொத்தமல்லி, போன்ற 12 வகையான காய்கறிகளை அரசு தோட்டக்கலை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை தொகுத்து நகர் பகுதிகள் முழுவதும் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.  இந்தத் திட்டத்தால் விவசாயிகளும் அவர்கள் விளைவிக்கும் காய்கறிகளை உரிய  விலைக்கு அரசு தோட்டக்கலை பண்ணையில் விற்க முடிகின்றது,  பொதுமக்கள் மலிவு விலையில் காய்கறி தொகுப்பை கூட்ட நெரிசல் இல்லாமல் வாங்கி பயனடைவதாகவும் மக்கள் வரவேற்பு தெரிவிக்கின்றனர்.இந்த திட்டத்தை அறிவித்த  தமிழக முதல்வருக்கும் அவர்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.